திருச்சி கோட்ட ரயில்வேயில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
பகுதியளவு ரத்து செய்யப்படும் ரயில்கள்:
தாம்பரம் – விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045): ஜூலை 1 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், முண்டியம்பாக்கம் – விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.
விழுப்புரம் – சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046): ஜூலை 1 ஆம் தேதி மதியம் 1.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், விழுப்புரம் – முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்படும்.
நேரம் மாற்றப்பட்ட ரயில்கள்:
விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019): ஜூலை 1 ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 30 நிமிடங்கள் தாமதமாக மாலை 3.05 மணிக்கு புறப்படும்.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
விழுப்புரம் – புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063): விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில்.
புதுச்சேரி – விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064): புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில்.
மேற்கண்ட இரு ரயில்களும் ஜூலை 1, 3, 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:
சென்னை எழும்பூர் – திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22675): சென்னை எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஜூலை 2, 3, 4 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66051): சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில்.
குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16128): குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில்.
மேற்கண்ட இரு ரயில்களும் ஜூலை 1 ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.
பயணிகள் இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு பயண திட்டங்களை வகுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.