இந்தியாவுக்கும் டிரினிடாட் & டொபாகோவுக்கும் இடையிலான நட்பு, இரு நாடுகளின் இதயங்களை இணைக்கும் ஆழமான பிணைப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்குப் பிறகு, இந்த நட்பு “நம்பிக்கையின் புதிய அத்தியாயம்” என அவர் வர்ணித்தார்.
வரலாற்றுப் பிணைப்பும், கலாச்சாரப் பெருமையும்
“நமது இந்த நட்பு, காலத்தால் அழியாதது,” என்று பிரதமர் மோடி தனது செய்தியில் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து கடல் கடந்து டிரினிடாட் & டொபாகோ மண்ணில் வேரூன்றி, தங்கள் உழைப்பாலும் கலாச்சாரப் பங்களிப்பாலும் அந்த நாட்டை செழிப்பாக்கிய முன்னோர்களின் தியாகமே இந்த ஆழமான நட்பின் ஆதாரம் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.
May the friendship between India-Trinidad & Tobago flourish in the times to come!
Highlights from a special welcome in Port of Spain… pic.twitter.com/yUprg1LyB4
— Narendra Modi (@narendramodi) July 4, 2025
கூட்டு வளர்ச்சிக்கு அழைப்பு
புதிய உச்சங்களை நோக்கி இந்தியா பயணிக்கும் இந்த வேளையில், டிரினிடாட் & டொபாகோ போன்ற நட்பு நாடுகளுடன் கைகோர்த்து முன்னேற விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். “வர்த்தகம், தொழில்நுட்பம், கலை, கல்வி, மக்கள் தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் நமது ஒத்துழைப்பு பெருக வேண்டும். பரஸ்பர வளர்ச்சிக்கு வழி வகுத்து, ஒருமித்த இலக்குகளை நோக்கி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
உலகிற்கு ஒரு முன்மாதிரி
இந்தியா – டிரினினடாட் & டொபாகோ இடையிலான இந்த பந்தம், எதிர்கால உலகிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். “நமது கூட்டு முயற்சி, உலக அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பெரும் பங்களிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்று அவர் கூறினார். இறுதியாக, இரு நாடுகளின் மக்களும் செழிப்புடன் வாழ தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, “ஜெய் ஹிந்த்!” என்று முழங்கினார்.