சென்னையில் இனி ஊபர் செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. குறைந்த நேரத்தில் ஏசி வசதியுடன் கூடிய மெட்ரோ ரயிலை நாள்தோறும் 3.25லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் சேவைக்காக ஆன்லைன், வாட்ஸ் அப், ஸ்மார்ட் கார்டு என பல வழிகளில் டிக்கெட்களை பெறலாம்.
தற்போது புதுவசதியாக ஊபர் செயலி மூலம் மெட்ரோ ரயில் சேவைக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊபர் செயலி மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை 50 சதவீதம் சலுகை விலையில் மெட்ரோ டிக்கெட்டை பெறலாம். (QR – Codeஐ) க்கியூஆர் கோர்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் டிக்கெட்டை பெறலாம். மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லவும், திரும்பவும் பயணக்கட்டணத்திலும் 50சதவீதம் சலுகை அறிவித்துள்ளது.
ஆட்டோ, கார், டூ வீலர் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு அடுத்து ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் வசதியை பெறும் 2வது நகரம் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.