தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவுக்குள் பல மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசுவதாக செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதனால் செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இப்படிப்பட்ட சூழலில் திடீரென டெல்லி பயணம் செய்த செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் செய்துள்ளார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி வரவேற்பு அளித்துள்ளனர்.
தொடர்ந்து இன்று மதியம் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.