கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக youtuber ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டார்.
கரூர் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பொய்யான வதந்தி பரப்பி வருவதாக நேற்று பெரும்பாக்கத்தை சேர்ந்த சகாயம், தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களான மாங்காடு சிவனேஸ்வரன், ஆவடி சரத்குமார் ஆகிய மூன்று பெயர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் கரூர் விவகாரம் தொடர்பாக பொய்யான வதந்திகளை பரப்பிய 25 சமூக வலைதளங்கள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.