நேற்று (16) மாலை காங்கேசன் துறைமுகத்தில் 4 கிலோ குஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் இந்தியாவில் இருந்து நாகபட்டினம் துறைமுகம் வழியாக கப்பலில் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார். அவரை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் போலீஸ் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது காங்கேசன்துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு அந்நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படவுள்ளார்.