’நாயகன்’ படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் ’தக் லைஃப்’. சிம்பு, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ’ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’, ’மெட்ராஸ் டாக்கீஸ்’, ’ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் ஜூன் 5-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ’தக் லைஃப்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் 8 லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.