இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை பயன்படுத்திய அமெரிக்க பெண் மருத்துவரான ரேச்சல் அணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் ரேச்சல் அணி புதுச்சேரியில் சந்திக்க வந்த அரவிந்தர் கண் மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசன் வரவழைக்கப்பட்டு அவரிடம் அமெரிக்க பெண் மருத்துவரை பாதுகாப்பாக போலீசார் ஒப்படைத்துள்ளனர். மேலும் அமெரிக்க பெண் மருத்துவர் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படும் நிலையில் அவர் கொண்டு வந்துள்ள தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன்,இருக்கும் இடத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள் இருப்பிடங்கள் அனைத்து தகவலும் தெளிவாக தெரிவிக்கும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளதாகவும் இது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .
மேலும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இந்த சேட்டிலைட் போன் புழக்கத்தில் இருந்தாலும் இது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது தற்பொழுது இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.