Author: admin
கரைவேட்டி கட்டிக்கொண்டு அரசியல் செய்யலாம், ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு ஒருதரப்புக்கு சார்பாக நடந்து கொண்டால் இப்படித்தான் அசிங்கப்பட நேரிடும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இதுஒன்றும் புதிதல்ல. நாகாலந்தில் பணியாற்றிய காலத்திலேயே ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார் என்பது தான் அவர் மீதான விமர்சனம். தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றது முதல் அந்த பதவிக்கு நியாயம் செய்யாமல், தன்னை நியமித்த எஜமானர்களுக்கு விசுவாசியாக இருந்தால் போதும் என்று அரசியல் சாசனத்தை தூக்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்ததால் தான் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைகுனிய நேரிட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே அவரது கடமை. ஒருவேளை மாற்றுக்கருத்து இருந்தால் அதுகுறித்து கட்டாயம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பலாம். ஆனால் அதே மசோதாவை திருத்தியோ, திருத்தாமலே சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட்டாக வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு அவ்வாறு மறுமுறை நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை எவ்வித காரணமும்…
திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சரின் தூக்கம் கெடுக்க வைத்ததில் முதன்மையானவர் விழுப்புரத்துக்காரரான அமைச்சர் பொன்முடி தான். வாயை திறந்தாலே ஆபாசம், சர்ச்சை.. படித்து பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றி ஆறுமுறை எம்எல்ஏ-வாக பதவியிலிருந்து என்ன பயன்… சமூகநீதிக்காக இயக்கம் கண்ட திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து என்ன பயன்?.. அவர் அள்ளிப்போடும் குப்பைகளை அச்சிலேக் கூட ஏற்ற முடியாதே… பேருந்துகளில் கட்டணமில்லாமல் மகளிர் பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக பேசி வருகிறார். ஆனால் 2022-ம் ஆண்டு இந்த திட்டத்தை ஓசி பஸ் என்ற எகத்தாளமாக பேசி ஏடாகூடத்தில் மாட்டிக் கொண்டவர் தான் இந்த பித்தளைமுடி. ரேஷன்கடை ஒன்றின் திறப்பு விழாவில் பெண்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் முக்கியத்துவம் என்று பேசிக்கொண்டே ஒன்றியக்குழு உறுப்பினரைப் பார்த்து “”ஏம்மா,,. நீ எஸ்சி.தானே..”” என்று பேசி வாங்கிக் கட்டிக் கொண்டவர்…
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்றால் அத்துறையை கையாளும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எதிர்கட்சிகள் வரிசையில் இருந்து அடிக்கடி எழுவதை நாம் கேட்டுள்ளோம். 1956-ல் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் அரியலூர் அருகே விபத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வேத் துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது வரலாறு. இதனை உதாரணமாகக் காட்டித்தான் தற்போது வரை ராஜினாமா குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால் எந்தவொரு அமைச்சரும் தனது பதவியை தூக்கியெறிந்ததாக தெரியவில்லை. இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பொதுமக்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இந்த கொடூரத்திற்கு The Resistance Front என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பும், நம்பிக்கையையும் தர பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடியவர்கள் யார்?.. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனநாயக முறைப்படி…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமின் பைசரன் சுற்றுலாத்தலத்தில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி இந்தியர்கள் 25 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தலைநகர் டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்துள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. காரணம், பீகார் மாநிலம் மிதிலாஞ்சல் பகுதியில் உள்ள மதுபானியில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்திற்கான விழாவில் கலந்து கொண்டது தான். அந்த நிகழ்ச்சியில் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்னர் பஹல்காம் படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “பயங்கரவாதியையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு கண்காணித்து தண்டனை வழங்கும். பூமியின் எல்லை வரை சென்று அவர்களை துரத்திப் பிடிப்போம்” என்று ஆவேசமாக கூறியது மிகப்பெரும் நம்பிக்கையை தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அதேபோன்று பஹல்காம் படுகொலை…
1974 மற்றும் 1976-ல் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து 10 ஆண்டுகளுக்கு கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. 1984-க்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக இலங்கை கடற்படை கைது நடவடிக்கையைத் தொடங்கியது. அதேகாலக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் எழுச்சிப் பெற்ற நிலையில், அவர்கள் மீதான கோவத்தை அப்பாவி மீனவர்கள் மீது திருப்பியது இலங்கை அரசு. விடுதலைப்புலிகளுக்கு உதவுகிறார்கள் என்ற காரணத்தைக் கூறியும், எல்லை தாண்டுகிறார்கள் என்ற பழைய பல்லவியைப் பாடியும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதும், சிறைபிடிப்பதும் என அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டது. அதிகாரபூர்வ தகவல்களின்படி, கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 843 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் நடைபெற்று வந்த இறுதிக்கட்டப் போர் முடிந்த…
இழப்பதற்கு இனி ஏதுமில்லை, அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது.. என்ற கூற்று இன்றைய தேதிக்கு அஇஅதிமுகவுக்குத் தான் பொருந்தும். பொன்விழாவை கடந்த கட்சி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கட்சி.. தற்போதைய பிரதான எதிர்கட்சி… அதன் தேர்தல் கணக்குகளை சற்று அலசுவோம்… கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகம், ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம், ஜோதி முத்துராமலிங்கத்தின் பசும்பொன் தேசியக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருந்தன. உட்கட்சி மோதல்கள்.. இந்த 5 ஆண்டுகளில் இரண்டு விதமான பிரச்னைகளை அதிமுக எதிர்கொண்டது. ஒன்று உட்கட்சி விவகாரம். அதிமுகவின் வாக்குக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போயஸ் கார்டன் வாசலில் வந்து நின்றதை நாடறியும். மோடியா…
ஆம், அரசியலில் நிறங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. கட்சிகளின் கொடிகளில் உள்ள நிறங்கள், சின்னங்களில் உள்ள நிறங்கள் போன்றவை தான் மக்கள் மனத்தில் முதலில் பதிகின்றன. அரசியலின் அரிச்சுவடி தெரியாதவர்களிடம் கூட கருப்பு – சிவப்பு என்றால் திமுக என்றும், அதில் வெள்ளைநிறத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் இருந்தால் அதிமுக என்றும் எளிதாக கூறிவிடுவார்கள். காவி என்றால் பாஜக என்பதும் அப்படியே.. அதிலும் கருப்பு நிறம், உலகம் முழுவதும் உள்ள அரசியல் இயக்கங்களின் ஆதார நிறமாகும். ஏனெனில் தங்களின் எதிர்ப்பினை தெரிவிக்க கருப்புச் சட்டை அணிவதும், கருப்பு பேட்ஜ் அணிவதும், கருப்பு பட்டையை கையில் அணிந்து வருவதும், கருப்பு பதாகையை ஏந்தி எதிர்ப்பை வெளிக்காட்டுவதும் உலகம் தழுவிய ஒரு எதிர்ப்பு அடையாளம். சமீபத்தில் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக நடைபெற்ற HANDS OFF போராட்டத்தில் அதிகம் பயன்படுத்தபட்ட நிறம் கருப்பு தான். தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள், தங்கள்…
காப்புரிமை… இந்த சொல்லின் வீரியமும், ஆழமும் சமீபகாலமாகத் தான் தமிழ் படைப்பாளிகளுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. அதுவும் இசைஞானி இளையராஜாவால் இன்னும் அதிகமாக, பேசுபொருளானது இந்த சொல். தனது பாடல்களை, இசைத்துணுக்குகளை தன்னுடைய அனுமதி இல்லாமல் பிற படங்களில் பயன்படுத்தினால் காப்புரிமை சட்டத்தின்படி இளையராஜா நோட்டீஸ் அனுப்புவது வழக்கம். உடனே இந்த ஆளுக்கு பணத்தாசை, அதனால் தான் இப்படி செய்கிறார் என்று ஏகத்துக்கும் எகத்தாளம் பேசப்படும். சமீபத்தில் அஜீத் நடித்த குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியபோதும் இதே கருத்து தான் சமூக வலைதளங்களில் உலா வந்தது. நிற்க. பொன்னியின் செல்வன்-2 படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது பெற்றது அனைவரும் அறிந்ததே. அதில் இடம்பெற்ற வீர ராஜ வீரா என்ற பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒன்றாகும். ஆனால் இந்த பாடல் தனது தந்தை நசீர் பயாசுதீன் டாகர் ( Nasir…
பேய்-க்கும் பேய்-க்கும் சண்டை, அத ஊரே வேடிக்கை பார்க்குதாம்.. காஞ்சனா படத்தில் இடம்பெற்ற வசனம்.. அது கிட்டத்தட்ட இப்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. விஷயம் என்னன்னா?… பொதுவாக நமக்கு தெரிந்த விஷயமோ, தெரியாத விஷயமோ அதுபற்றிய அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணையத்தில் விக்கிபீடியாவில் சென்று தேடுவோம். (விக்கிபீடியா தகவல்களின் அடிப்படையில் ஒருவரையோ, ஒரு அமைப்பையோ எடைபோடக் கூடாது என்பதே என் திண்ணமான கருத்து.) ஆன்லைன் என்சைக்ளோபீடியா, அதுவே விக்கிபீடியா. 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி விக்கிபீடியா தனது சேவையை துவக்கியது. ஜிம்மி வேல்ஸ் மற்றும் லேரி சேங்கர் இதனை ஆரம்பித்தனர். “”இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும், மனித அறிவின் கூட்டுத்தொகையை இலவசமாகப் பெறும் ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.”” இதுதான் விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம். “தகவல்கள் அதுவும் இலவசமாக” என்று ஒற்றை வார்த்தையில் இதனை குறிப்பிடலாம்.…
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானே வளரும் என்பது கிராமத்தின் சொலவடை. அதற்கு இருவேறு அர்த்தங்களை கூறுவார்கள். ஆனால் அது நமக்குத் தேவையில்லை.. ஊரான் பிள்ளையை ரெண்டாக்கினால் நம் பிள்ளைக்கு வாய்ப்பு என்பது பாஜகவின் கணக்கு.. எந்த மாநிலமாக இருந்தாலும் சரி, பெரிய கட்சியோ, சிறிய கட்சியோ அதனுள் பிளவை ஏற்படுத்தி அதன்மூலம் ஆதாயம் பார்க்கும் வித்தையில் கை தேர்ந்து இருக்கிறது காவிக் கட்சி. இல்லையென்று மறுப்பவர்களுக்கு ஆதாரம் காட்ட பீகார், மகாராஷ்ட்ரா என வரிசையாக இருக்கிறது சாட்சி. அதன் ஆக்டோபஸ் கரங்கள் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை. ஒன்றுபட்ட அதிமுகவுக்குள், பாஜக ஆடிய சடுகுடு ஆட்டத்தை யாரும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. சசிகலா விரட்டியடிக்கப்பட்டதும், டிடிவி தினகரன் திகாருக்கு பார்சல் செய்யப்பட்டதும் யாரால்.. ஒன்றாயிருந்த இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கலகம் மூட்டி விட்டதும், கருங்காலி மரமாய் போலி தர்மயுத்தம் நடத்த உத்தரவு பிறப்பித்ததும் யார்?.. இப்போது கட்டுச்சோத்துக்குள்…