Author: Editor TN Talks
குழந்தைகள் கொண்டாடும் ஃபேண்டஸி டிராமா “ மரகதமலை ”. கோடை கால கொண்டாட்டம்! L.G. Movies சார்பில் S.LATHHA தயாரிக்கும் படம் “ மரகதமலை . தமிழ் சினிமாவில் குழந்தைகள் ரசிக்கும் படங்கள், அவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த ஏக்கக்தை போக்கும் வகையில் இப்படம் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ஒரு பெண் டைரக்டர் கரடி,புலி மற்ற மிருகங்களுடன் அசத்தலாக அறிமுகமாகிறார். பெண் டைரக்டர்கள் சுதா கோங்குரா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ப்ரியா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஹலிதா சமீம், கிருத்திகா உதயநிதி வரிசையில் பெண் டைரக்டராக எஸ்.லதா. இப்படத்தை தயாரித்து, கதை திரைக்கதை, வசனம், பாடலை எழுதி இயக்குநராக எஸ்.லதா ( S.LATHHA ) அறிமுகமாகிரார். டைரக்டரான அனுபவத்தை அவர் கூறும் போது.. ராஜா ராணி கதைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சின்ன வயதில் பாட்டி, அம்மா சொல்லும் கதைகள் பல கேட்டு…
இந்தியா – பாகிஸ்தான் இடையே நான்காவது நாளாக போர் பதற்றம் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் வான்வழி தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் போன்றவை நடந்து வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டிய தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கி நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றுகாலை (10/5/02025) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசும்போது, வேண்டும் என்றே ஆத்திரமூட்டும் வகையில் பாகிஸ்தான் நடந்து வருவதாக பலமுறை தான் கூறியுள்ளதாக தெரிவித்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல்களையும், அவதூறுகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தியா தரப்பில் பொறுப்புடனும், சர்வதேச சமூகத்திற்கு பதிலளிக்கும் வகையிலும் எதிர்வினை நடத்தப்படுவதாக அழுத்தம் திருத்தமாக கூறினார். பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே பாகிஸ்தானின் செயல்கள் அமைந்துள்ளன.…
பொதுவாகவே நிஜ உலகில் நடந்த சில நிகழ்வுகள் திரைப்படங்களாக வரும் போது அதனை மக்கள் கொண்டாடுவது உண்டு. காந்தி, காமராஜர் தொடங்கி அமரன் திரைப்படம் வரை நாட்டுக்காக ஒருவர் செய்த தியாகங்களை படங்களாக மக்கள் போற்றியது உண்டு. ஆனால் இவை அனைத்துமே, அவர்கள் மறைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்த ஒன்று. ஆனால் இன்றைய திரையுலகம் முழுக்க முழுக்க வியபாரமயமானதாக மாறிவிட்டது. குறிப்பாக பாலிவுட் திரையுலகம். நெப்போட்டிசம், குரூப்பிசம் என குறிப்பிட்டவர்களின் கைகளில் மட்டுமே புரண்டு வருகிறது பாலிவுட். அறிவியல், தொழில்நுட்பம் என வளர்ந்து வரக் கூடிய ஒரு நாட்டில், மக்களை முட்டாள்களாகவே வைக்கும் நோக்கில் படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர் பாலிவுட் பிரபலங்கள்.. இது தான் பாலிவுட் ரசிகர்களின் தலையெழுத்து என்று இருந்தால், தற்போது பாலிவுட் செய்திருக்கக் கூடிய செயல் மிகவும் கேடுகெட்ட, கீழ்தரமான ஒன்றாக உள்ளதாக, பொதுமக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலில்…
குரு ராகு ராசி கேது தனுசு துலாம் கிரகங்களின் பெயர்ச்சி என்பது நாள், மாதம், வருடம் என அமைகிறது. கிரக பெயர்ச்சி, வாக்கியம் மற்றும் திருக்கணிதம் பஞ்சாங்க அடிப்படையில் மாறுபடுகிறது. அந்த வகையில் திருக்கணிதப் படி, கடந்த மார்ச் 29 தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. இரண்டரை ஆண்டுகள் கும்பத்தில் இருந்த சனி பகவான், மார்ச் 29ல் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். கடந்த ஓராண்டாக ரிஷப ராசியில் இருந்த குரு பகவான், மே 15ம் தேதி ரிஷ ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மீனத்தில் இருந்த ராகு பகவான், மே 18ம் தேதி கும்ப ராசிக்கும், கன்னியில் இருந்த கேது பகவான், சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரக பெயர்ச்சிகள் திருக்கணித…
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்ச் சூழல் நிலவும் நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் நிதி அளிக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. நிதி தர வேண்டாம் என்று வலியுறுத்திய இந்தியா, வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம். இந்தியா உடனான போரில் மும்முரமாக இறங்கியுள்ளது பாகிஸ்தான். ஏற்கெனவே பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்த பாகிஸ்தானுக்கு, இந்த நிலை மோசமான விளைவுகளைக் கொடுத்துள்ளது. சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளக் கூட கடன் வாங்க வேண்டிய நிலை வந்துள்ளது. அதனால்தான் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் கேட்டுள்ளது பாகிஸ்தான். வாக்கெடுப்பு – புறக்கணிப்பு, வெளிநடப்பு ஆனால், பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கக் கூடாது என்று இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு…