Author: Editor TN Talks
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர்ச் சூழல் தீவிரமடைந்து வருகிறது. பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. இவை சரியா தவறா என்ற வாதங்களும் நாட்டுக்குள் பறந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், போர் முகத்தை விடவும் சமூக ஊடகங்கங்களில் போர் குறித்த ஆவேசம் கலவரமாய் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏற்படும் பதற்றமே நமக்கிருக்கும் முக்கிய கடமையை அறிவுறுத்துகிறது. அது என்ன? மீண்டும் ஒருமுறை ‘பின்னணி’யைப் பார்ப்போம்… காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்தான் இதன் ஆரம்பப் புள்ளி. அதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். கணவனை இழந்த பெண், அவரது சடலத்திற்கு அருகே மனமுடைந்து அமர்ந்திருந்த அந்நிகழ்வின் புகைப்படம் சமூக ஊடகங்களில் தீ போல் பரவியது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்தான் இது என்று இந்திய உளவுத்துறை தெரிவித்தது. அந்தப் புகைப்படமும் அதன் பின்னணியான நிகழ்வும் நாட்டு மக்களைக்…
ஐபிஎல் 18-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய 10 அணிகள் இந்த முறை களமிறங்கின. நாட்டின் 13 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதுவரை நடந்து முடிந்த தொடர்களில் மும்பை, சென்னை ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தின. இந்தமுறை எப்படியும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பெங்களுர், குஜராத், டெல்லி ஆகிய அணிகள் களத்தில் தங்கள் பலத்தை நிரூபித்து வந்தன. அதற்கு ஏற்றார்போல் புள்ளிப்பட்டியலில் இந்த மூன்று அணிகள் தான் முதலிடத்தில் இருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஏப்ரல் 22-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம்…