Author: Editor TN Talks
10க்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்து விட்டதாக சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாநில மகளிர் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சமையல் கலை நிபுணரும், திரையுலக பிரமுகருமான மாதம்பட்டி ரங்கராஜ் அனைவராலும் அறியப்பட்டவர். அவரது பாரம்பரிய உணவுகள் பொதுமக்கள் மத்தியிலும், சமையல் ஆர்வலர்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் இல்ல விழாக்களில் சமையல் செய்து பெரும் பிரபலமடைந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த மாதம்பட்டி ரங்கராஜ், ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். தொடர்ந்து, சின்னத்திரையான விஜய் டி.வி.யில் வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை…
கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி, டிஜிபி அலுவலகத்தில் விஜய்யின் வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில், விஜய் கரூர் செல்லும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு…
தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்தது. அதனடிப்படையில், பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 64 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், இது குறித்து கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும்…
திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் கலந்துரையாடி வரும் நிலையில், மாவட்ட, நகர, பகுதி செயலாளர்களை மாற்றியுள்ளது அக்கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 2026 தேர்தல் பணி தொடர்பாக சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை, நேற்று மதுரை தெற்கு, சிவகாசி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதுவரை மொத்தமாக 22 நாட்களில் 52 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துள்ள நிலையில் நேற்று 23வது நாளாக ஒன் டூ ஒன் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி நீக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி புதிய மாவட்ட செயலாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, அரூர் தொகுதி, வேறொரு…
காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும், மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப்பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர்மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட, பாஜகவாலேயே புறக்கணிக்கப்பட்ட மாஜி அண்ணாமலை, இன்று எங்கள் தலைவரைப்பற்றி, ஒரு ராஜ்யசபா சீட்டிற்காக தன் ஆன்மாவை விற்றுவிட்டவர் என்று கூறியுள்ளார். ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜகவும், அந்தக்கட்சியால் காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை. உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத் துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்ததோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர். அவர் ஏற்றுக்கொண்டதால் அந்த எம்.பி., பதவிதான் கவுரவம் பெற்றதேயோழிய அவர் தகுதிக்கு…
கரூரில் துயர சம்பவம் தொடர்பான வழக்கில், கற்பனையான நபரின் பெயரில் நீதிமன்றத்தில் மோசடி செய்து உத்தரவு பெறப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டி விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, அக்டோபர் 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அதிகார வரம்புக்குட்பட்ட இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “வழக்கை…
அந்தரங்கப் படங்கள், விடியோக்கள் இணையத்தில் பரவினால் உடனடியாக நீக்குவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்கள், ஆபாச இணையதளங்களில் பரவி வரும் தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் வழக்கறிஞரின் விடியோக்களை நீக்க இணையதளங்களுக்கும், இது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவுவதை தடுக்கும் வகையிலும், புகார் அளிக்கும் வகையிலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள், தமிழகத்தில் மேலும் 9 இணையதளங்களில் பரவி வருவதாக அதன் விபரங்களை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு டி.ஜி.பி. தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, மனுதாரர் தரப்பில் ஏற்கனவே…
இன்று மும்பையில் 2வது சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். நாட்டின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான மும்பையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மிகப்பெரிய அளவில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணி 4 கட்டங்களாக நடைபெற்றது. ரூ.19,650 கோடியில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்ட பணி நிறைவு பெற்றது. இந்த நிலையில் விமான நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து ஆச்சார்யா அட்ரோ சவுக் முதல் கப்பரேடு வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக ரூ.12,300 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பை மெட்ரோவின் 3வது வழித்தட பணியும் முற்றிலும் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனை தொடர்ந்து மும்பை ஒன் போக்குவரத்து திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.…
கரூர் தவெக பிரச்சாரப் பரப்பரை கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் இன்று கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் பரத் முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது, இருவரையும் பார்த்த நீதிபதி, உங்களை எதற்காக கைது செய்து உள்ளார்கள், நீங்கள் கைது செய்யப்பட்டது உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா, போலீசார் உங்களை தாக்கினார்களா என கேட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கரூரில் நடந்த உண்மைகளை டாக்குமெண்டாக தாக்கல் செய்வதாகவும், உண்மை தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தரப்பில் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், அருணா ஜெகதீசன் விசாரணையில் உள்ளதால் அதில் நடந்த உண்மை தன்மை தெரிய வரும் என்றார். தொடர்ந்து வாதாடிய தவெக தரப்பினர், கரூர் மாவட்டத்தில் சம்பவம் நடந்த அன்று சம்பள…
சிங்கபெருமாள் கோவில் அடுத்த மருதேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னை கடித்த நல்ல பாம்புடன் சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த மருதேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (38). விவசாயியான இவர், தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, தன்னை ஏதோ சீண்டியது போல உணர்ந்துள்ளார். இதனையடுத்து விவசாயி முத்து, தன்னைச்சுற்றி பார்த்தபோது, நல்லபாம்புக் குட்டி ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்துள்ளது. இதற்கிடையில் முத்துவிற்கு மயக்கம் ஏற்ப்பட்டது. முத்துவோடு உடன் இருந்த உறவினர் ஒருவர், முத்துவை கடித்தது இந்த பாம்புதான் என அந்த பாம்புக் குட்டியை பிடித்தார். மேலும், அந்த பாம்புக் குட்டியை கவர் ஒன்றில் போட்டுக்கொண்டு நேரடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக முத்துவை அழைத்துச் சென்றார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முத்துவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்லப்பாம்புடன் முத்து சிகிச்சை பெற வந்ததை கண்ட சக நோயாளிகள் மற்றும்…