இசையமைப்பாளர் இளையராஜா இசையில் யுவன்சங்கர் ராஜா பாடிய தெலுங்கு பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. BGM KING, LOVE DRUGS என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் யுவன் சங்கர் ராஜா. தனது தனித்துவமான இசையால் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் யுவன், பிற இசையமைப்பாளர்கள் இசையில் பாடுவதும் உண்டு. ஆனால் அவரது தந்தையும், இசைமேதையுமான இளையராஜாவின் இசையில் யுவன் ஒரு பாடலைக் கூட பாடியதில்லை.
தற்போது தெலுங்கில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள ஒரு படத்திற்காக யுவன் ஒரு பாடலை முதன்முறையாக பாடியுள்ளார். பவன் பிரபா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ”ஷஷ்டிபூர்த்தி” படத்தில் ரூபேஷ் மற்றும் ஆகான்ஷா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 30-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சைதன்யா பிரசாத் எழுதிய இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் நித்யா ஸ்ரீ ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.