தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட படங்கள் குடும்ப வாழ்க்கையோடு ஒன்றினைவதாக இருக்கும். சாதாரண ஒரு குடும்பமும் அதில் வரும் பிரச்னைகளை குடும்பத் தலைவர் எப்படி சரி செய்வார் என்பதுமான கதைக் களங்கள் அதிகம். அப்படி 2015-ம் ஆண்டு கமல்ஹாசன், கௌதமி உட்பட பலர் நடிப்பில் வெளியாகி குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப் படமாக இருந்தது பாபநாசம்.
மலையாளத்தில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் திரிஷியம். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமெக் செய்யப்பட்டது. அப்படி தமிழில் வெளியானது தான் பாபநாசம். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
இந்த நிலையில், திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் முதலில் ரஜினிகாந்த்தை தான் தேர்வு செய்ததாக இயக்குநர் ஜித்து ஜோசப் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, “பாபநாசம் படத்திற்கு ரஜினிகாந்த்தான் முதல் தேர்வாக இருந்தார், ஆனால் படத்தில் போலீஸ் தாக்குவது போன்ற காட்சிகள் அவரது
ரசிகர்களுக்குப் பிடிக்காது என நினைத்தேன், இதற்கிடையே கமல் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், இதை அறிந்த ரஜினிகாந்த், “சூப்பர்! வாழ்த்துகள்!” என பெரிய மனதுடன் அவருக்கே உரித்தான பாணியில் கூறி எங்களை வாழ்த்தினார்” என்று தெரிவித்துள்ளார்.