பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து செய்தி விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி
“பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.”
மு.க.ஸ்டாலின்
தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள்.
இஸ்லாமிய மக்களுக்காக இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக – கல்வி – பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் , தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளில், எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்;
அது மனிதகுல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தவெக விஜய்
உன்னத தியாகத்தை போற்றும் வகையில், பக்ரீத் பண்டியை கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உயரிய தியாகத்தை போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதி ஏற்போம்’.