துணை குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார்.

இந்தியாவின் 17வது துணை குடியரசு தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் வித்யாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வெற்றியை மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்ய உள்ளார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துணை குடியரசு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆனது. இந்த பதவிக்கு சம்பளம் ஏதும் வழங்கப்படாத நிலையில் மாநிளங்களவை தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் கிடைக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version