மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் ஜல் கங்கா சம்வர்தன் அபியான் இன்றுடன் நிறைவடைகிறது.
காண்ட்வாவில் நடைபெறும் மாநில அளவிலான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி மெய்நிகர் முறையில் கலந்து கொண்டு இதில் உரையாற்ற உள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, மாநிலத்தில் 2 ஆயிரத்து 48 கோடி ரூபாய் செலவில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணை குளங்கள் கட்டப்பட்டன.
மேலும், 40 லட்சம் மக்களின் பங்கேற்புடன் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நீர் ஆதாரங்கள் புதுப்பிக்கப்பட்டன.
இன்றைய நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் ஆயிரத்து 518 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நீர் பாதுகாப்பு பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.
நீர்வளத் துறையின் 4 நீர்ப்பாசனத் திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.