எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் இந்தியாவின் வலுவான பாதுகாப்பு அமைப்பின் அடையாளமாக மாறி உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, விமானப் படை வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானுடனான தாக்குதலில் வெற்றிகரமாக செயல்பட்ட நாட்டின் முப்படைகளுக்கு வணக்கம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
இந்திய விமானப் படையின் வீரத்தை ஒட்டு மொத்த உலகமே பார்த்ததாக பாராட்டு தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய பெண்களுக்காக நீதியை ராணுவம் நிலைநாட்டி உள்ளதாக புகழாரம் சூட்டினார். நமது முப்படைகளின் வீரச் செயல் இந்தியர்களுக்கும், இந்திய தாய்மார்களுக்கும் உலக அரங்கில் பெருமையை தேடிச் தந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். எதிரிகள் அணுகுண்டு மிரட்டல் விடுத்த போது, அவர்களுக்கு பதிலடியாக முதலில் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கம் விண்ணதிர கேட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
நமது விமானப் படை தளங்களை தாக்க எதிரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்ந்து தோல்வியையே சந்தித்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, எஸ் 400 வான் பாதுகாப்பு நாட்டிற்கு கவசமாக இருந்ததாக தெரிவித்தார். எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் இந்தியாவின் வலுவான பாதுகாப்பு அமைப்பின் அடையாளமாக மாறி உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், நமது வழியில் பதிலடி பயங்கரமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம், இந்தியாவின் அடையாளம்..!
Previous Articleஅந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…
Related Posts
Add A Comment