தவெக விஜய் வரும் 13ம் தேதி தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து மேற்கொள்ள இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளை முடித்த விஜய் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் வரும்1 3ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் செய்வதால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த விமானம் மூலம் திருச்சிக்கு விரைந்தார். அங்கு அவரை தவெக தொண்டர்கள் உற்சாகமாக வழிப்பட்ட்னார். புஸ்ஸி ஆனந்த் வருகையை ஒட்டி தவெகவினர் குவிந்ததால் விமான நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சீராக்கும் போது தவெகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் புஸ்ஸி ஆனந்த் உட்பட தவெகவை சேர்ந்த 8 பேர்  மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக கூறி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version