சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது
இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கனிமொழி, ஆ.ராசா, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்ற வரும் நிலையில் கூடுதல் பணிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
நிர்வாகிகளை மண்டல பொறுப்பாளர்கள் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளை கவனிக்க 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.