கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து 2026-2027 கல்வி ஆண்டிற்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடப்புத்தகங்களையும் அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார். அந்தவகையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு (2026-2027)  தொடங்குவதாகவும்,  1 முதல் 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம்  அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

மாணவர்கள், எதிர்பார்த்துக் காத்திருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20, புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதியும், 4 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version