Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி: வாகை சூடிய வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கோவையில் பேரணி!!
    தமிழ்நாடு

    ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி: வாகை சூடிய வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கோவையில் பேரணி!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், “இந்தியா போல வளர்ந்து வருகிற எந்த ஒரு நாடும், இதுபோல பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தது இல்லை. இந்தியா வல்லரசாகி கொண்டு இருக்கிறது, ஒருபுறம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு புறம் அருகில் இருக்கக் கூடிய நாடுகள் தங்கள் நாட்டினுடைய, நிலத்தை தங்கள் நாட்டின் ஆதரவை இந்தியாவை நோக்கி குறி வைத்து இருக்கக் கூடிய இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு கொடுக்கக் கூடிய அடைக்கலம் மற்றும் ஆதரவால், இந்தியா தொடர்ச்சியாக தாக்குதல்களை சந்தித்துக் கொண்டு வருகிறது.” எனக் கூறினார்.

    மேலும், “இதற்கு முன்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அதே பாராளுமன்ற தாக்குதல்களாக இருக்கலாம் , மும்பை வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம், இதுபோல ஆயிரக் கணக்கான இந்தியர்களை, நம்மைப் போன்று பலி கொடுத்த வேற எந்த நாடும் இருக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் இதுபோல சம்பவங்கள் நடக்கும் போது, இந்திய அரசு என்பது பல்வேறு உலக நாடுகளிடம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையிலே தங்கள் குரலை எழுப்புவதோடு, தங்கள் தகவலை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அதை மாற்றிக் காட்டியவர், பிரதமர் மோடி. நம் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலாகட்டும், நம் நாட்டிலே தமிழ்நாட்டு தாக்குதலாகட்டும், எந்த விதமான மத தாக்குதல்கள் நடந்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்காமல், தமிழகத்தில் கோயம்புத்தூரில் அதிகமாக ஒரு அரசியல் கட்சியும் இயக்கமும், தங்களுடைய தொண்டர்களை மத பயங்கரவாதத்திற்கு பலியாக்கி இருக்கிறது என்றால் அது நம்முடைய இயக்கம் மட்டும் தான்.” எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    https://tntalks.in/wp-content/uploads/2025/05/bjp.mp4

    தொடர்ந்து பேசிய அவர், “அப்படி தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு முகமை மூலம், நமக்கெல்லாம் பாதுகாப்பினை கொடுத்து இந்த நாட்டை அரண் போல காத்துக் கொண்டு இருக்கிற பிரதமர் நரேந்திர மோடி பஹல்காமில் நடந்த சம்பவத்தை, மிகச் சரியாக கணிக்கப்பட்டு துல்லியமாக திட்டமிடப்பட்டு எங்கெல்லாம் பயங்கரவாத முகாம்கள் இருந்ததோ, அங்கெல்லாம் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. எந்த பெண்களைப் பார்த்து நீ மோடியிடம் சொல் ! என்றார்களோ அதே பெண்ணினத்தை வைத்து இதோ உங்கள் பயங்கரவாத முகாம்களை தாக்குகிறோம் என்று முடிவெடுத்தார் மோடி.” எனக் கூறினார்.

    தொடர்ந்து, “உலகில் பல்வேறு நாடுகள் பெண்களுக்கு உலகில் முக்கியத்துவம் கொடுக்கிறோம் சம நிலைப்படுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள், ஆனால் மிக முக்கியமான ஆபரேஷனிலே அதுவும் இஸ்லாமிய வீர பெண்மணியை தன்னுடைய ஆபரேஷனில் முக்கிய அதிகாரியாக நியமித்து எப்படி ? இஸ்லாமியர்களும் இந்த நாட்டினுடைய பாதுகாப்பிற்காக வேலை செய்ய முடியும் என்பதை காட்டி இருக்கிறோம். பல்வேறு செய்திகளை இந்த ஆபரேஷன் சிந்தூர் மற்ற நாடுகளுக்கு சொல்கிறது. எந்த காரணம் கொண்டும் இந்த நாட்டில் இருக்கிற குடிமக்களின் உயிரையும், உடமையையும் நாங்கள் பாதுகாப்போம் என்ற செய்தி பலமாக சொல்லப்பட்டு இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிக்க:

    மேலும், “அதுமட்டுமல்ல எங்களுடைய ராணுவ நடவடிக்கைகள் என்பது இன்று வளர்ந்து கொண்டு இருக்கிற அனைத்து நாடுகளுக்கும் ஈடுகொடுக்கும் விதமாக, அத்தனை விதமான ராணுவ தளவாடங்களையும் மிகச் சரியான நேரத்தில் பயன்படுத்த முடியும் என்பதை நம்முடைய ராணுவம் காட்டி இருக்கிறது. அதற்கு மேலாக உலக நாடுகளுடைய பார்வையை நம் இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது.
    ஆப்ரேஷன் சிந்தூர் உலக நாடுகளுக்கு இந்தியா பயங்கரவாதத்தை எப்படி ? எதிர்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. இந்த ஆபரேஷன் சிந்தூர் மூவர்ண கொடி யாத்திரை, நாடு முழுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆப்ரேஷன் சிந்தூர் என அழகான பெயரிட்டு இருக்கிறார் மோடி.” எனக் கூறினார்.

    தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், “திலகம் என்பது மங்களகரமான வார்த்தை மட்டுமல்ல அது ஒரு வாழ்க்கையை குறிக்கக் கூடிய சக்தி. மிகச் சரியாக இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு சிந்தூர் நடத்தப்பட்டு இருக்கிறது. இதைப் பற்றி மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய நாடு பாதுகாப்பான தலைவர்கள் கையில் இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய ராணுவம் நமக்காக நல்ல செயல்களை செய்து கொண்டு இருக்கிறது என்பதை உணர வைப்பதற்காக இந்த யாத்திரை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இது தனிப்பட்ட பா.ஜ.க வின் நிகழ்ச்சி அல்ல. இது உலக மக்களுக்கான நிகழ்ச்சி.” எனத் தெரிவித்தார்.

    BJP BJP women’s wing Coimbatore Coimbatore rally defense strategy global response India superpower Indian Army Islamic terrorism military strike MLA Narendra Modi National Security NIA Operation Sindhur political party religious extremism Sindhur Yatra terrorist attack Tricolor rally Vanathi Srinivasan woman officer அரசியல் கட்சி ஆப்ரேஷன் சிந்து இந்திய ராணுவம் இந்தியா வல்லரசு இஸ்லாமிய பயங்கரவாதம் உலக நாடுகள் எம்.எல்.ஏ கோயம்புத்தூர் கோவையில் பேரணி சிந்தூர் யாத்திரை தேசிய புலனாய்வு முகமை தேசிய மகளிர் அணி நரேந்திர மோடி பயங்கரவாத தாக்குதல் பா.ஜ.க பாதுகாப்பு பாதுகாப்பு நடவடிக்கை பெண் அதிகாரி மத தாக்குதல் மூவர்ண கொடி ராணுவ தாக்குதல் வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதீபக் பாண்டியன் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம்.. வாட்ஸ் அப் குழுவில் சர்ச்சை கருத்து.. கோவையில் ஒருவர் கைது !!!
    Next Article குப்பை தொட்டிகளில் உணவு தேடும் ஒற்றைக் காட்டு யானை… வைரல் வீடியோ !
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.