வெளிநாட்டு சாக்லேட் போல் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கொகைன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில், எத்தியோப்பியாவில் இருந்து வந்த இருவரிடம் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களிடம் ரூ. 70 கோடி மதிப்பிலான 5.6 கிலோ கொகைன் இருப்பது தெரிய வந்தது. இந்த கொகைனை கடத்தி வந்த இருவரையும் விமான நிலைய அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அதில் போதைப்பொருள் கடத்துவது தெரியாமல் இருக்க, ஃபெர்ரரோ ரோச்சர் என்ற பிரபல சாக்லேட்டின் தங்க நிறைத்தில் கொகைனை மறைத்து சாக்லேட் போல் கடத்தி வந்தது அம்பலமானது.
தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் முதற்கட்ட விசாரணையில் கடத்திவரப்பட்ட கொகைன் மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்குடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கொகைன் சாக்லேட்டுகளை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.