சென்னையின் முக்கிய அடையாளமாக இருப்பது தியாகராயநகர். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனக் கூறலாம். அந்த ஏரியாவை சுற்றி நூற்றுக்கணக்கான துணிக் கடை, நகைக் கடை, பாத்திரக் கடை என அனைத்து விதமான கடைகளும் உள்ளன. மிகக் குறைந்த விலையில் இங்கு பொருட்களை வாங்க முடியும் என்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வர். குறிப்பாக வார இறுதி மற்றும் விஷேச நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இங்கு மக்கள் வந்து செல்ல ஏதுவாக மெட்ரோ ரயில் சேவையும் நடந்து வருகிறது.

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அருகேயுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version