ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் சென்னை ஒன்றி சென்ற செயலியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைபின் 2வது ஆணை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் பயணச்சீட்டு மற்றும் திட்டமிடல் செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதாவது இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் விதமாக ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்பட கூட சென்னை ஒன்று செயலி பயன்பாட்டுக்கு வ்ருகிறது.
இதன் மூலம் மின்சார ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோ, கார்களை ஒரே கியூஆர் கோடு மூலம் இணைப்பதால் அதன் இயக்க நேரத்தை அறிந்து கொள்ள முடியும். மேலும் யுபிஐ அல்லது கட்டண அட்டைகள் மூலம் பயண சீட்டுகளை பெற்று ஒரே பதிவு மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்ய முடியும்.
இந்த சென்னை ஒன்று செயலி தமிழ், தெலுங்கு, கனண்டம் போன்ற மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகௌவ்ம், போக்குவரத்து சேவையை எளித்தாக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு செயலியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.