தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,665 காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம் நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்களும் தேர்வு செயப்படவுள்ளன. இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும்.
நவம்பர் 9-ம் தேதி தேர்வு தொடங்கப்படவுள்ள நிலையில், நாளை முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.