அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இடையே கடும் வாக்குவாதம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் முறையாக நியமிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நோக்கி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர் 45 வயதுக்கு மேல் ஆட்கள் போடக்கூடாது என நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் கரூரை பொறுத்தவரை கட்சியில் நிர்வாகிகள் இல்லாத நிலை உள்ளது குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் இல்லவே இல்லை என்ற நிலை இருக்கிறது.
இதை சொல்வதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா நீ எல்லாம் என்ன நிர்வாகியா என உரிமையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி முறையாக பணியாற்ற முடியவில்லை என்றால் எழுதிக் கொடுத்துட்டு கிளம்பிட்டே இரு என ஆவேசமாக கூறியதாக கூறப்படுகிறது.
அருகில் இருந்த தங்கமணி வேலுமணி மற்றும் கேபி முனுசாமி போன்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி தனது கருத்தை கூறுவதாகவும் ஒரு கடிதம் ஒன்றை நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார் அதில் கட்சியின் நிலை குறித்து மிகவும் கவலையாக உள்ளது வருத்தமாக உள்ளது வேதனையாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து நிர்வாகிகள் படித்தவுடன் அந்த கடிதத்தை மீண்டும் வாங்கி விட்டதாக தகவல்