திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை விவகாரத்தில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி மாறுபட்ட தீர்ப்பு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு வழக்கு செல்கிறது.

மதுரையைச் சேர்ந்த கண்ணன் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் உள்ளிட ஏராளமானோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோவிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோவிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இந்த கோவிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இது சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என குறிப்பிடப்பட்டிருந்ததும் வருத்தமளித்தது. எனவே சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். என்று ஒரு தரப்பினரும், இதேபோல சிக்கந்தர் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது அங்கு வழிபாடு செல்லும் இஸ்லாமியர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று ஒரு தரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், இந்த வழக்குகளில், மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் அனைத்து தரப்பினரும், எழுத்து பூர்வமான அறிக்கையை, மே 15 க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்த நிலையில் இன்று இரண்டு நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பை வழங்கினார்.

அதில் மனுதாரர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதாக நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மற்றொரு நீதிபதியான ஸ்ரீமதியோ, மனுக்களை ஏற்பதாக கூறினார். மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version