நேபாளத்தில் நேற்று வெடித்த வன்முறை கருப்பு நாள் என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததால் எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அங்கு கலவரம் ஏற்பட்டது. இந்த சம்வத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களை தன்னிச்சையாக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் நேபாளம் கலவரம் தொடர்பாக மனிஷா கொய்ராலா கண்டன கருத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட மனிஷா கொய்ராலா, வன்முறை நடந்த நாளை “கருப்பு நாள்” என பதிவிட்டுள்ளார். அதாவது போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், அரசின் அடக்குமுறையையும் கண்டிக்கும் விதமாக வன்முறை நாளை கருப்பு நாள் என குறிப்பிட்டுள்ள மனிஷா கொய்ராவுக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version