Author: Editor TN Talks

ஏப்ரல் 29-ஆம் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தேர்தல் முடிவு வெளியாகும் முன்னரே இக்கூட்டத்தை நடத்த முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத  நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை  ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில்  மண்ணின்  உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய  விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில்,  இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் பரபரப்பாக பரப்புரையில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக கோடைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யோ ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். முருகப் பெருமானின் 2-வது அறுபடைவீடான திருச்செந்தூருக்கு பயணம் சென்றுள்ள விஜய், இன்று அதிகாலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கடலில் இறங்கி வழிபாடு மேற்கொண்ட அவர், முருகனை மனமுருக வேண்டினார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் விஜய்க்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டி, தவெக சார்பில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது திருச்செந்தூருக்கு விஜய் வருகை தந்ததை கேள்விப்பட்ட ரசிகர்கள், தொண்டர்கள் அதிகாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கோயில் வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் திருச்செந்தூரை தொடர்ந்து விஜய்யின் அடுத்த ஆன்மீக பயணம் எங்கே?…

Read More

வடக்கு தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும். ஏப்ரல் 30: தமிழகத்தின் ஒருசில இடங்களில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 01 மற்றும் 02: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மாநிலத்தின் மற்ற பகுதிகளில்…

Read More

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது இன்று மாலைக்குள் வெடிக்கும் என்று இமெயில் மூலம் மாவட்ட ஆட்சியரின் அலுவலக முகவரிக்கு ஈமெயில் ஒன்று வந்துள்ளது.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் மோப்பநாய் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஓரு ஓரு பகுதியிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டாவது முறையாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மனநலம் பாதித்தவரின் செயலால் பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர். திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து ஆனந்தூர் செல்ல வேண்டிய நகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த ஓட்டுநரும் நடத்துநரும், அடுத்த ஷிப்ட் ஊழியர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்காகப் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்றனர். அந்தச் சமயம் பேருந்துக்குள் ஏறிய மர்ம நபர் ஒருவர், திடீரென ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கியுள்ளார். பேருந்து நகரத் தொடங்கியதும், “யாரோ இயக்கத் தெரியாத நபர் பேருந்தை ஓட்டுகிறார்” என்பதை உணர்ந்த பயணிகள், அச்சத்தில் அலறியுள்ளனர். பேருந்து சுமார் 10 அடி தூரம் செல்வதற்குள்ளேயே, உள்ளே இருந்த ஐந்து பயணிகள் தங்களது உயிரைக் காத்துக்கொள்ள பேருந்திலிருந்து கீழே குதித்து ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக பேருந்துக்குள் ஏறி, அதனை நிறுத்தி,  அந்த நபரைச் சூழ்ந்து பிடித்து, திருவாடானை…

Read More

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று பில்லா. ரஜினியின் பில்லாவை தொடர்ந்து அதே பெயரில் அஜித் நடிப்பில் வெளியான இப்படம் சக்கைப் போடு போட்டது. ஸ்டைலிஷான வில்லனாகவும், அப்பாவியான ஹீரோவாகவும் என 2 வேடங்களில் கலக்கி இருப்பார் அஜித்குமார். அதேப் போல அதுவரை இல்லாத அளவு மிகவும் கவர்ச்சியான அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கி இருந்தார் நயன்தாரா. 2007-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில், இப்படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி பில்லா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. நவீன 4கே தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்ட இப்படம், தமிழ்நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட பில்லா படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தமிழக மீனவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டுச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவர் சிக்கியுள்ள நிலையில், மற்றவர்களைப் பிடிக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் பணத்தை இலங்கை கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது கொள்ளையடித்துச் சென்று வருகின்றனர். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இலங்கை கடற்கொள்ளையர்கள் மிகுந்த அச்சுறுத்தலாகியுள்ள நிலையில் அவர்களைப் பிடிக்க வேண்டும் என மீனவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்கொள்ளையன் ஒருவரை தமிழக மீனவர்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த மீனவர்கள் 20க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூவர், செருதூரைச் சேர்ந்த பாலமுருகன்…

Read More

தமிழ்நாட்டின் போட்டி இந்தியாவுடன் அல்ல, தெற்காசியாவுடன் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல் சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்! முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்! இவ்வாறு முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

Read More

ஒடிசாவில் இறந்த சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு எடுத்து சென்ற அண்ணனின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிது முண்டா. இவரது தங்கை கக்ரா முண்டா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து போயுள்ளார். கக்ரா முண்டா மல்லிபாசியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அதில் ரூ.19,300 பணம் இருந்துள்ளது. தங்கை இறந்தவுடன் அந்த பணத்தை எடுப்பதற்காக ஜிது முண்டா, சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அணுகியுள்ளார். ஆனால் அங்கு கக்ரா முண்டா இறந்தது தெரியாமல் சம்பந்தப்பட்டவர் வந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ஜிது முண்டா, இடுகாட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட தனது தங்கையின் உடலை தோண்டு எடுத்து, அந்த எலும்புக்கூட்டை ஆதாராமாகக் காட்ட வங்கிக்கு கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த வங்கி அதிகாரிகள், அதிர்ச்சியில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஜிது…

Read More

சென்னையில் பாஜக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த பாஜக மண்டலத் தலைவர் மீது பாதிக்கப்பட்டவர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அம்சா மெய்யப்பன், பாஜக மாவட்ட கூட்டுறவுச் செயலாளராக உள்ளார். இவரை, கடந்த 25ஆம் தேதி, மாவட்ட நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டு பாலவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு செல்லும்படி தெரிவித்துள்ளனர். அவ்வாறு  வந்த அம்சாவிடம், தேர்தல் பணியில் ஈடுபட்டதற்காக ஒரு தொகை வழங்கி விட்டு, நோட்டில் கையெழுத்து போட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். எவ்வளவு தொகை என கேட்ட அம்சாவை,  அங்கிருந்த பாஜக மண்டல நிர்வாகி அமர்நாத் மற்றும் அசோக்குமார் ஆகியோர் அவதூறாகப் பேசியதோடு, செருப்பால் அடித்ததாக நீலாங்கரை காவல்நிலையத்தில் அம்சா புகார் அளித்தார். அம்சா காவல்நிலையத்துக்கு வந்ததை அறிந்து பாஜக மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து சமாதானப்படுத்தியும் அவர் ஏற்காததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

Read More