சாம்சங் நிறுவனம் முதல் முறையாக கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் ( Galaxy Z Trifold ) தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன் இரண்டாக மடிக்கும் விதத்தில் கூடிய தொலைபேசியை ( Foldable Mobile ) விற்பனை செய்து வந்திருந்த நிலையில் தற்பொழுது மூன்றாக மடிக்கும் ஒரு தொலைபேசியை ( Galaxy Z Trifold ) உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்த தொலைபேசியில் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம் :
முதலில் இந்த தொலைபேசி 3.9 மில்லிமீட்டர் மெல்லிய அளவைக் கொண்டுள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே அளவை கொண்ட மூன்று தனி தொலைபேசியை இணைத்து ஒரே தொலைபேசியாக வெறும் 309nகிராம் எடை அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது ( கிட்டத்தட்ட ஒரு குட்டி கைக்கணினி போல ). 200 மெகா பிக்சல் கேமரா, மூன்று 5600 Mah பேட்டரி செல்கள், 45 வாட்ஸ் திறன் அளவு கொண்ட அதிவேக சார்ஜர் வசதி, 10 இன்ச் டிஸ்ப்ளே வசதி, செராமிக் கொரில்லா கண்ணாடி அமைப்பு என பல்வேறு முக்கிய சிறப்பம்சங்கள் அடங்கிய தொலைபேசியாக இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரை ஃபோல்ட் திகழ்கிறது.
இந்த தொலைபேசியை வரும் டிசம்பர் 12ம் தேதி கொரியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதன் பின்னர் முறையே சைனா ஐக்கிய அரபு அமீரகம் சிங்கப்பூர் அமெரிக்கா போன்ற நகரங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
https://x.com/SamsungSG/status/1995659180154171588?t=LvlcRp3Gx63JqgDio0YZvw&s=1
12 GB Ram மற்றும் 512 GB சேமிப்பு கொள்ளளவு கொண்ட மாடல் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும், 16 GB Ram மற்றும் 512GB சேமிப்புக்குள் கொண்ட மாடல் இந்திய மதிப்பில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
