Author: Editor web2
முதலமைச்சரும் தனது கணவருமான ஜோசப் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி தொடரப்பட்ட மனுவை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இரு தரப்பினரும் நேரில் ஆஜராகாமல், தங்களது வழக்கறிஞர்கள் மூலம் மட்டுமே ஆஜராகினர். அப்போது வழக்கின் நடைமுறைகள் குறித்து நீதிமன்றம் ஆலோசித்ததுடன், சமரச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் வழக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்ததால் முதலமைச்சர் விஜய் தரப்பில் வழக்கை…
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் தமிழகத்தின் உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், கர்நாடகாவிடமிருந்து மாதந்தோறும் உரிய அளவு நீரைப் பெறுவது தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக அவர் கூறினார். நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர், காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கும், பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் உயிர்நாடியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் தமிழகத்தின் உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், கர்நாடகாவிடமிருந்து மாதந்தோறும் உரிய அளவு நீரைப் பெறுவது தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக அவர் கூறினார். காவிரி நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்வந்ததாகவும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கர்நாடக தரப்பின் வேண்டுகோளின் பேரில் அது ஒத்திவைக்கப்பட்டதாகவும்…
‘வெற்றி 150 நாள்’ திட்டத்தின் மூலம் தமிழக வெற்றிக் கழக அரசு மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டதாகவும் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி குற்றம் சாட்டி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்றும் குற்றம்சாட்டினார். “மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டோம்; தொட்டால் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று அரசு கூறுகிறது. ஆனால், சனிக்கிழமைகளில் பனையூரில் நடைபெறும் வாரச்சந்தைக்கு வருபவர்கள் அனைவரும் இதற்கு முன் ‘தொட்டவர்கள்’ தான்” என்று கிண்டலாக குறிப்பிட்டார். மேலும், “வெற்றி 150 நாள் திட்டம் மூலம் ஒன்றிய அரசிடம் தவெக அரசு அமைதியாக சரணடைந்துவிட்டது. தேர்தலில் சத்தமில்லாமல் வந்தது போலவே, மத்திய அரசிடமும் சத்தமில்லாமல் சரணடைந்துள்ளது” என்று அவர் விமர்சித்தார். நிதியமைச்சர் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் வாசித்ததையும், வேளாண் அமைச்சர் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து…
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழக அரசு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், அதற்கு நேர்மாறாக அரசு சேவைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது சமூகநீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தனியார் கூட்டாண்மையில் செயல்படுத்தப்படவுள்ள ஐந்து முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார பேருந்துகள் இயக்கம், மாணவர் விடுதிகள், கோவை–அரியலூர் மின் வழித்தடம், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்கள் ஆகியவை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளதாக…
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA ) அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று பாட நிபுணர்கள், தேர்வு வினாக்களை பல்வேறு முறைகளில் வெளியே கொண்டு சென்று கசிவுக்கு காரணமாக இருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. டெல்லி விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், உயிரியல் நிபுணர் மனிஷா மந்தாரே, வேதியியல் நிபுணர் பிரல்ஹாத் வித்தல்ராவ் குல்கர்ணி, இயற்பியல் நிபுணர் மனிஷா சஞ்சய் ஹவால்தார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சிபிஐ விசாரணையின்படி, தேசிய தேர்வு முகமையின் ரகசியப் பிரிவில் மொழிபெயர்ப்பு பணிக்காக வழங்கப்பட்ட வெற்று தாள்களை குல்கர்ணி சிறிய சீட்டுகளாக கிழித்து, 135 வேதியியல் வினாக்களையும் அவற்றின் விடைத் தேர்வுகளையும் சுருக்கமாக எழுதி வெளியே கொண்டு சென்றுள்ளார். பின்னர் இணைக் குற்றவாளி மனிஷா வாக்மரே உதவியுடன் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி, மாணவர்களுக்கு அந்த வினாக்களையும் சரியான பதில்களையும்…
காவிரி நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று காவிரி நீர் பிரச்சினை மற்றும் குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் வறண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மட்டுமல்லாமல் அனைத்து கட்சித் தலைவர்களும் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் காவிரி பிரச்சினை எழுந்தபோது, அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அதுவே நடைமுறையாக இருந்ததாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும்,…
காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் தோல்வியை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்டி வருவதாக திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு அழைத்துள்ள எம்.பி.க்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “காவிரி விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்,” என்றார். இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வேளாண் மற்றும் நிதிநிலை அறிக்கையையும் டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்தார். “இந்த பட்ஜெட்டில் புதியதாக எதுவும் இல்லை. பெயர் மாற்றங்களைத் தவிர மக்களுக்கு பயனளிக்கும் உருப்படியான…
தனியார் செய்தி நிறுவன பெண் செய்தி வாசிப்பாளருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை நிபுணருமான பி.ஆர். சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பி.ஆர். சுந்தர் மீது அண்மையில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், கடந்த மாதம் 1-ஆம் தேதி பி.ஆர். சுந்தரின் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் தன்னை சுமார் 3 மணி நேரம் பூட்டி வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதற்கு அவரது மனைவி மங்கையர்கரசியும் உடந்தையாக செயல்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த இருவரையும் தீவிரமாகத் தேடி வந்த…
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விரிவான அரசியல் கலந்தாலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் 3 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தொடர் அமளி நிலவி வரும் சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் சுமார் 50 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான பிரியங்கா காந்தி வத்ராவும் பங்கேற்றார். இந்தச் சந்திப்பின் போது, மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, கூடுதல் அரசியல் ஒருமைப்பாடு அவசியம் எனத் தெரிவித்த ராகுல் காந்தி, அரசுக்குக் கீழ்க்கண்ட 3 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். 50% தொகுதி உயர்வை முன்மொழியும் மசோதாவின் வரைவை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னதாகவே சுற்றறிக்கையாக…
மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, ஆகஸ்ட் மாதத்தில் இயக்கப்படும் பல முக்கிய விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12666), கொடைரோடு மற்றும் திண்டுக்கல் நிலையங்களைத் தவிர்த்து, மானாமதுரை – காரைக்குடி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். அதேபோல், நாகர்கோவிலில் இருந்து மும்பை லோக்மான்ய திலக் முனையத்திற்கு ஆகஸ்ட் 9, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (16352), திண்டுக்கல் நிலையத்தைத் தவிர்த்து மானாமதுரை – காரைக்குடி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலும் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நின்று செல்லும்.…