Author: Editor web2
ஆதார் செயலி 4 கோடி பதிவிறக்கங்களை கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் அடையாள சேவைகள் மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதையே இந்த மைல்கல் பிரதிபலிப்பதாக அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் செய்திக்குறிப்பின்படி, ஆதார் செயலி தற்போது ஆதார் தொடர்பான பல்வேறு சேவைகளை ஒரே டிஜிட்டல் தளத்தில் வழங்கும் வசதியான செயலியாக உருவெடுத்துள்ளது. முகவரி மாற்றம், கைபேசி எண் புதுப்பித்தல், மின்னஞ்சல் முகவரி சேர்த்தல், பயோமெட்ரிக் விவரங்களை நிர்வகித்தல், இ-ஆதார் பதிவிறக்கம் உள்ளிட்ட சேவைகளை மக்கள் வீட்டிலிருந்தபடியே எளிதாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி அறிமுகமானதிலிருந்து இதுவரை 11.65 லட்சம் முகவரி மாற்றங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சுமார் 49 லட்சம் கைபேசி எண் புதுப்பிப்புகளும் செயலி மூலம் செய்யப்பட்டுள்ளதால், ஆதாருடன் இணைக்கப்பட்ட தொடர்பு விவரங்களை மக்கள் எளிதாக புதுப்பித்து வருகின்றனர். கடந்த ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்பு வசதியும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை…
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஜூலை 20 முதல் 23-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் ஜூலை 20 முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஜூலை 24-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25-ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, வரும் 23 -ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் மக்கள் தலைவனாக உருவெடுக்கும் அரசியல் அதிரடித் திரைப்படமாகத் தயாராகியுள்ளது. இதில் விஜய் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். சென்சார் வாரியத்தின் கடுமையான தணிக்கை நடைமுறைகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் நேரிட்ட இணைய கசிவு போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி, இத்திரைப்படம் ‘ஏ’ சான்றிதழுடன் தற்போது ரிலீசுக்குத் தயாராகியுள்ளது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்பதிவு தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஜனநாயகன்’ படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அங்கு ஜூலை 23 அன்று…
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய தொழிற்கொள்கை தொடர்பான ஆலோசனைகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் திட்டத்திற்கு சில அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால், அது சமூகநீதிக்கு எதிரான செயல். அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், படித்த இளைஞர்கள் தனியார் துறையையே நம்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால், பல நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களை புறக்கணித்து வெளிமாநிலத்தவர்களை அதிகளவில் பணியமர்த்துகின்றன. தவெக அரசின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களை 75 சதவீதம் வரை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் மின்கட்டண சலுகைகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா,…
சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியில், போலீசாரை கத்தியால் தாக்கிய ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக உள்ள கருப்பு என்ற தமிழழகு (27) மீது கஞ்சா கடத்தல், இரட்டை கொலை உள்ளிட்ட மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில், தனது நண்பர் சூர்யாவுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழழகை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரைக் கண்ட தமிழழகு, தப்பிக்க முயன்றதுடன், காவலர் விஜயகுமாரை கத்தியால் தாக்கினார். இதில், காவலர் விஜயகுமாரின் வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தற்காப்பு நடவடிக்கையாக…
பிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரளாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கள்கிழமை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 19) நள்ளிரவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி திங்கள்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்பதால், மாணவர்கள் போட்டியை முழுமையாகக் கண்டு மகிழவும், மறுநாள் பள்ளிக்குச் செல்லும் சிரமத்தைத் தவிர்க்கவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் என். சம்சுதீன் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார். “கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, கேரள பொதுக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். இதற்கு முன்பாக, சிபிஎம் மூத்த தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான வி.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென சிலர் தொலைபேசி வாயிலாகத் தனக்கு பண ஆசை காட்டி ‘குதிரை பேரம்’ பேசியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து 10 தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக அடுத்தடுத்து தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை, திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 10-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கரூர் சின்ன ஆண்டாண்டங்கோவில் சாலையில் உள்ள பாரி நகர் பகுதியில் கனகராஜ் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் அலுவலகத்தில் நேற்று இரவு கரூர் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். பின்னர் சோதனை முடிந்து புறப்பட்ட போலீசார் அலுவலகத்திற்கு சீல் வைத்து சென்றுள்ளனர். குறிப்பாக குதிரை பேரம் தொடர்பாக நடைபெற்ற சோதனையில் பணம் கைப்பற்றப்படவில்லை எனவும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் அலுவலகத்தை சீல் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை என்ற பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட் செயல்பட்டு வந்தது சுமார் 96 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த வனப்பகுதி 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது.1929 ஆம் ஆண்டு முதல் 2028 ஆண்டு வரை 100 ஆண்டுகள் இங்கு தேயிலை எஸ்டேட் அமைக்க மும்பையை சேர்ந்த பிபிடிசி என்ற தனியார் நிறுவனத்துக்கு ஜமீன் குத்தகைக்கு நிலம் வழங்கினார். இதையடுத்து பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள ஊத்து நாலுமுக்கு காக்காச்சி ஆகிய இடங்களில் தேயிலை எஸ்டேட்டை உருவாக்கி தொழிலாளர்களை பணியமர்த்தியது. ஆரம்பத்தில் இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர் நாளடைவில் சிங்கம்பட்டி ஜமீன் உயிரிழந்தார். பின்னாளில் நாடு முழுவதும் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு ஜமீன்களுக்கு சொந்தமான நீலங்கள் கையகப்படுத்தப்பட்டாலும் கூட மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் (2026–2029) புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று காலை தொடங்கியது. தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட மொத்தம் 21 நிர்வாகப் பொறுப்புகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரி உமாசங்கர் தலைமையில் நடைபெறும் இந்தத் தேர்தலில், சங்கத்தின் மொத்தம் 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். திரைப்படத் துறையின் பல்வேறு முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்தத் தேர்தலில், இயக்குநர் சேரன் தலைமையிலான “நம்ம கே. பாக்யராஜ் அணி” மற்றும் இயக்குநர் வி.சி. குகநாதன் தலைமையிலான “திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அணி” நேருக்கு நேர் மோதுகின்றன. சேரன் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சேரன், பொதுச்செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர்களாக சமுத்திரக்கனி மற்றும் சினேகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மறுபுறம், வி.சி. குகநாதன் அணியில் தலைவர் பதவிக்கு வி.சி.…
மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய திரைப்பட விருதுகளில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சிறந்த பின்னணி இசைக்காகத் தனது 3-வது தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது மாமாவும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், “என் அன்புத் தம்பி ஜி.வி.பிரகாஷ், உங்களின் 3-வது தேசிய விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நாம் இணைந்து கொண்டாடும் 10-வது தேசிய விருது என்பதால் இது எங்கள் குடும்பத்திற்கு பெருமையான தருணம். இசையின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ந்து பலருக்கும் ஊக்கமளித்து வருகிறது. இன்னும் பல உயரிய மைல்கற்களை எட்ட என் மனமார்ந்த வாழ்த்துகள். இறைவன் உங்களை என்றும் ஆசீர்வதிக்கட்டும்” என வாழ்த்தி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை 7 தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷின் 3…