Author: Editor web2

தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், விவசாயிகளின் நலனை அரசு புறக்கணித்துவிட்டதாகவும் தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதையடுத்து சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட வானதி சீனிவாசன், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது பதிவில், “கோட் சூட் போட்ட விவசாயி முதலமைச்சர் அவர்களே…” என்று குறிப்பிட்டு, த.வெ.க. தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும், விதைப்புக் கால நிதியுதவியாக ரூ.15,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பும்…

Read More

விவசாயிகளின் முழு பயிர்க் கடன் தள்ளுபடி மற்றும் இலவச சோலார் மின் திட்டம் தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக வேளாண்துறை செயலாளர் சங்கர் தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற புதிய திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அவர், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய 20 துறைகளுக்கு மொத்தம் ரூ.58,374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட ரூ.12,713 கோடி அதிகம் என்றும் தெரிவித்தார். புதிய திட்டங்கள் தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் என்ற புதிய 5 ஆண்டு திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தென்னை மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்காக ரூ.22.30 கோடி, விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 500 பேருக்கு ட்ரோன் பயிற்சி வழங்கவும், 50 பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கவும் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 4 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள், உயிர் மற்றும் இயற்கை வேளாண்மைக்கு…

Read More

தமிழக அரசின் ஆறாவது வேளாண் நிதிநிலை அறிக்கையும், தற்போதைய அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டும், உழவர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.15,167.62 கோடியில் இருந்து ரூ.470.92 கோடி குறைந்து, ரூ.14,696.70 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக வளர்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதால் மொத்த வேளாண் நிதிநிலை அறிக்கையின் மதிப்பு உயர்ந்ததாகக் கூறப்பட்டாலும், அதை நீக்கிப் பார்த்தால் மொத்த ஒதுக்கீடே ரூ.648 கோடி குறைந்துள்ளது.  மொத்த மாநில பட்ஜெட்டில் குறைந்தது 25 சதவீதம் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 கொள்முதல் விலை குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது மிகப்பெரிய…

Read More

தமிழகத்தின் சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்…

Read More

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக மீண்டும் ஏற முயன்ற சுவாரஸ்யமான சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டசபைக்கு வெளியே தலைமைச் செயலக வளாகப் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரும், அதற்குச் சற்று முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சட்டமன்றக் கூட்டம் நிறைவடைந்ததும், இருவரும் வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைத் தனித்தனியாகச் சந்தத்துப் பேட்டியளித்தனர். பின்னர், சட்டசபையில் உள்ள தங்களது அலுவலகங்களுக்குச் சென்று எம்.எல்.ஏ-க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைகள் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குப் புறப்படுவதற்காகக் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு நடந்து வந்தார். அப்போது, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது உதயநிதி ஸ்டாலினின் கார் என்பதை அறியாமல், அவசரத்தில் கதவைத் திறந்து ஏற முயன்றார். உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அவரது பாதுகாவலர்கள்,…

Read More

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிப்பட்ட புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொன்முடியின் பேச்சு மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற…

Read More

சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு, தனது சொந்த செலவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை நடிகர் தனுஷ் கட்டிக் கொடுத்துள்ளார். தனுஷ் பத்தாம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில்தான் கல்வி பயின்றார். அங்கு ஏற்கனவே இருந்த மேற்கூரை அமைக்கப்பட்ட பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், அங்குப் பணியாற்றிய தனது முன்னாள் ஆசிரியர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், அவருடன் பயின்ற 1999-ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்கள், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா மற்றும் பள்ளி நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தனுஷுடன் படித்த சக மாணவரும், ‘வேலையில்லா பட்டதாரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளருமான குமரன் கலந்துகொண்டு…

Read More

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக  கைது செய்யப்பட்ட,  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து 1.30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கைது முதல் செங்கிப்பட்டி வரை காவிரி உரிமை தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தஞ்சாவூர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர், சாலை மார்க்கமாகப் பலத்த பாதுகாப்புடன் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டார். இதனிடையே,  இன்றைக்குள் விசாரணை நடத்தி முடித்துவிட்டு அவரை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிற்பகல் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படும்…

Read More

இந்தியாவில் பல்வேறு குற்றங்களில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274 பேரை, கடந்த 2019 முதல் இதுவரை 36 நாடுகளிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயங்கரவாதம், கொலை, பாலியல் குற்றங்கள், பொருளாதார மோசடி, போதைப்பொருள் மற்றும் இணையவழிக் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர்களே இதில் இடம்பெற்றுள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் குற்றம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற பலர், பெயரை மாற்றி புதிய அடையாளங்களுடன் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இந்திய சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்ட அவர்களை, வெளிநாட்டு அரசுகளுடன் மேற்கொண்ட ஒத்துழைப்பு, நாடு கடத்தல் ஒப்பந்தங்கள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர முடிந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 274 பேரில் 62 பேர் கொலை, கொள்ளை உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தொடர்புடையவர்கள். மேலும் 53 பேர்…

Read More

பிரபல  நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மிக ஆழமான சமூக விழிப்புணர்வுச் செய்தி அடங்கிய இன்ஸ்டா ஸ்டோரி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தனது பதிவில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் இடையே நிலவும் பெருமிதங்களைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள மீனா, “உங்கள் சாதி, மதம், பிறந்த இடம் மற்றும் பாலினம் ஆகியவை அனைத்தும் பிறப்பால் தானாக அமைந்தவை. அவற்றைப் பெறுவதற்கு நீங்கள் எந்த முயற்சியையும் அல்லது உழைப்பையும் செய்யவில்லை; எனவே, அவற்றைக் குறித்துப் பெருமைப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அதற்குப் பதிலாக உங்கள் நற்குணம், உங்கள் நற்செயல்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் மனித நேயத்துடன் தேர்ந்தெடுக்கும் வழிகள் ஆகியவற்றைக் குறித்து மட்டுமே பெருமை கொள்ளுங்கள்” எனத் தனது கருத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். சாதி, மத உணர்வுகளை விட மனிதநேயமும் தனி மனிதக் குணமுமே ஒருவரின் உண்மையான அடையாளத்தைத் தீர்மானிக்கும் என்ற…

Read More