Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!
    Featured

    ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!

    Editor web2By Editor web2August 4, 2026Updated:August 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 08 04 15h00m06s732
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக  கைது செய்யப்பட்ட,  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து 1.30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    கைது முதல் செங்கிப்பட்டி வரை

    காவிரி உரிமை தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தஞ்சாவூர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர், சாலை மார்க்கமாகப் பலத்த பாதுகாப்புடன் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டார். இதனிடையே,  இன்றைக்குள் விசாரணை நடத்தி முடித்துவிட்டு அவரை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிற்பகல் உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படும் வழியில் விழுப்புரத்தில் உணவருந்திய உதயநிதி, 8 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மாலை தஞ்சை எல்லைக்கு வந்தடைந்தார். தஞ்சை தெற்கு மற்றும் கிழக்குக் காவல் நிலையங்கள் முன்பாக ஏராளமான திமுகவினர் திரண்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காகப் போலீஸார் வாகனத்தை யூ-டர்ன் செய்து செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குத் திருப்பினர். முதலில் அங்கு இறங்க மறுத்து உதயநிதி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் காவல் நிலையத்திற்குள் சென்றார்.

    விசாரணை நிறைவு… விடுதலை

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தஞ்சை எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டன் மாலை 6.45 மணி முதல் இரவு 8.10 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரம் உதயநிதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் காவல் நிலைய ஜாமீனில் முறைப்படி விடுவிக்கப்பட்டார்.

    Udhaya nidhi 1 scaled

    காவல் நிலையத்திற்கு வெளியே கொட்டும் மழையிலும் காத்திருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெளியே  வந்த உதயநிதி ஸ்டாலின், காரில் ஏறி நின்று திமுகவினரைப் பார்த்து கைகளை அசைத்தபடியே புறப்பட்டுச் சென்றார்.

    காரில் திருச்சி செல்லும் உதயநிதி, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளதாகவும், இன்று இரவு 10.30 மணி அளவில் சென்னை வந்தடைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    DMKProtest SengipattiPoliceStation Thanjavur UdhayanidhiStalinReleased
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!
    Next Article தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டித் தந்த நடிகர் தனுஷ்!
    Editor web2
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.