Author: Editor web2
தமிழக அரசு பைக் டாக்சி சேவைகள் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கும் வரை, ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சிகளை இயக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செயலி மூலம் இயங்கும் பைக் டாக்சி சேவைகள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பகுதிநேர வேலை தேடும் இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயண வசதியையும் வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தெளிவான விதிமுறைகள் இல்லாததால் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்வதாகவும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசு விரைவில் கட்டுப்பாட்டு விதிகளை வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில்…
ஹாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘Spider-Man: Brand New Day’, உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் புதிய வரலாறு படைத்துள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், வெளியான முதல் வார இறுதியிலேயே உலகளவில் 927 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,700 கோடிக்கும் மேல்) வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் மூலம், ‘Avengers: Endgame’ படத்துக்கு அடுத்தபடியாக, உலக சினிமா வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தொடக்க வார இறுதி வசூலை பெற்ற திரைப்படமாக Brand New Day உருவெடுத்துள்ளது. வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 355 மில்லியன் டாலரும், சர்வதேச சந்தைகளில் 572 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். சீனாவில் மட்டும் 121 மில்லியன் டாலர் வசூலித்த நிலையில், இந்தியாவிலும் ஹாலிவுட் படங்களுக்கான…
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, மாநில அரசுகள் விரும்பினால் வாபஸ் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜூலை 20-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் வழக்குகளின் விசாரணையைத் தொடரலாம்; ஆனால், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது கட்டாய நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று கடந்த ஜூலை 28-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவால், அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை மாநில அரசுகள் வாபஸ் பெற முடியாத நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மனுதாரர்கள் சார்பில் விளக்கம் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, “மாநில அரசுகள் சட்டப்படி வழக்குகளை முடிக்கவோ அல்லது வாபஸ் பெறவோ…
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் மோதல் வெடித்தது. கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு மீதான அதிருப்தியில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர், விராலிமலை விஜயபாஸ்கர்கள் என முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஒரு அணியாக திரண்டனர். இவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் சிவி சண்முகம் உள்ளிட்டப் பலரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடந்து எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சிலர் சமாதானமானதாக கூறப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கினார் இபிஎஸ். ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவிமட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை. வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதனால் அப்பொறுப்புகளை ஏற்கமாட்டோம் என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அறிவித்தனர். இதனிடையே விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் இந்த உட்கட்சி பூசல் விவகாரமும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில்…
காவிரி நீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குரிய நீரை உரிய நேரத்தில் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், காவிரி நீர் பகிர்வில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 26.954 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பாசனமும், குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த உத்தரவின்படி 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலும், பிலிகுண்டுலு எல்லைப் பகுதியில் தற்போது அதிகபட்சமாக 550 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி நிலவரப்படி, கர்நாடக மாநிலத்தின் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். அணையில் 23 டிஎம்சி, கபினி அணையில் 18.6 டிஎம்சி, ஹாரங்கி அணையில்…
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனையகங்களில் “ஆய்வு” என்ற பெயரில் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் கெடுபிடிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் சிவகாசி பட்டாசுத் தொழில் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வர்த்தகம் நடைபெறும் இந்தத் தொழில், நாட்டின் மொத்த பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை பூர்த்தி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அனைத்து உரிமங்களையும் பெற்று சட்டப்படி இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனையகங்களில் அதிகாரிகள் நடத்தும் அதிரடி ஆய்வுகள் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தீபாவளி…
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.25 கோடி பேர் திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ததன் மூலம், மத்திய அரசு கூடுதலாக ரூ.9,493.66 கோடி வரி வசூலித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தவறான வரிச்சலுகைகள் மற்றும் போலியான கழிவுத் தொகை கோரிக்கைகளை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார். தரவு பகுப்பாய்வு , சரிபார்ப்பு நடவடிக்கைகள், சோதனைகள் மற்றும் ஆய்வுகள் மூலம் இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும், தவறான வரிச்சலுகை பெற உதவியதாக சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறினார். 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் மட்டும் 1.25 கோடி Updated ITR-கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.9,493.66 கோடி கூடுதல் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) செயல்படுத்திய NUDGE (Non-intrusive Usage of…
குறைந்த தண்ணீரில் அதிக வருமானம் ஈட்டும் மாற்றுப் பயிர் சாகுபடியாக டிராகன் பழம் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் சொட்டுநீர் பாசன முறையில் டிராகன் பழங்களை வெற்றிகரமாக சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெண்டாமேடு முருககவுண்டனூர் அருகே வெங்கடதம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி, செம்மண் நிறைந்த மேட்டுப் பாங்கான நிலத்தில் டிராகன் பழச் சாகுபடியை மேற்கொண்டுள்ளார். தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, சொட்டுநீர் பாசன முறையில் வாரத்திற்கு இரு முறை, 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே தண்ணீர் பாய்ச்சி செடிகளை பராமரித்து வருகிறார். களிமண் நிலம் அல்லது அதிக தண்ணீர் கிடைத்தால் செடிகள் அழுகும் அபாயம் இருப்பதால், மிகவும் கவனமாக பராமரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். ஒருமுறை செடிகளை நட்டு, முறையாக கவாத்து செய்து பராமரித்தால் சுமார் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும் என்றும், பராமரிப்பு செலவும்…
பாஜக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் தொகுதி மறுவரையறை (Delimitation), தமிழகத்தை கடுமையாக பாதிப்பதுடன், தமிழக மக்களின் அரசியல் அதிகாரத்தையும் பறிக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மாமல்லபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “பாஜக தொகுதி மறுவரையறையை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அது தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். அதோடு, தமிழக மக்களிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்,” என்றார். மேலும், “நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை முயற்சியை ஒவ்வொரு மாநிலக் கட்சியும், தேசியக் கட்சியும் இணைந்து தோற்கடிக்க வேண்டும். தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது. அதை ஆதரிப்பவர்கள் ‘எட்டப்பர்கள்’.…
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த ஜூலை 18-ஆம் தேதி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு ஜூலை 27-ஆம் தேதி கடிதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரச்சாரப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பயணம் தொடங்கத் தயாராக இருந்த நிலையில், ஜூலை 30-ஆம்…