Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்’ – எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி
    Featured

    ‘சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்’ – எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

    Editor web2By Editor web2August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sp velumani press meet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர்  அதிமுகவில் மோதல் வெடித்தது. கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு மீதான அதிருப்தியில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர், விராலிமலை விஜயபாஸ்கர்கள் என முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஒரு அணியாக திரண்டனர்.

    இவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் சிவி சண்முகம் உள்ளிட்டப் பலரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடந்து எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சிலர் சமாதானமானதாக கூறப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கினார் இபிஎஸ். ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவிமட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை. வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதனால் அப்பொறுப்புகளை ஏற்கமாட்டோம் என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அறிவித்தனர்.

    இதனிடையே விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் இந்த உட்கட்சி பூசல் விவகாரமும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி,  மீண்டும் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்கவேண்டும் எனவும், இல்லையென்றால் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்கமாட்டோம் என மீண்டும் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், “எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். சி.வி.சண்முகம். அதுபோல இபிஎஸ் முதலமைச்சர், பொதுச்செயலாளர் ஆவதற்கும் உழைத்தவர் சி.வி. சண்முகம். தொடர்ந்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை தொடரக்கூடாது. கட்சி பலப்படுத்தப்பட வேண்டும்.

    எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பழைய பொறுப்புகளை அளித்தால், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

    AIADMK Sasikala SPVelumani TTVDhinakaran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆயிரம் தடைகள் வந்தாலும், திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் ஒளிரும்- பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்  உறுதி!
    Next Article குடியரசுத் தலைவருடன் உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு…. பட்டுப் பாதை உறவை வலுப்படுத்த முயற்சி
    Editor web2
    • Website

    Related Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    August 3, 2026

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    August 3, 2026

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.