Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி
    Featured

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    Editor web2By Editor web2August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bike Taxi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசு பைக் டாக்சி சேவைகள் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கும் வரை, ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சிகளை இயக்க அனுமதி இல்லை என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செயலி மூலம் இயங்கும் பைக் டாக்சி சேவைகள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பகுதிநேர வேலை தேடும் இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயண வசதியையும் வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தெளிவான விதிமுறைகள் இல்லாததால் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்வதாகவும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசு விரைவில் கட்டுப்பாட்டு விதிகளை வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், பைக் டாக்சி சேவைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் அரசு முழுமையான கொள்கை முடிவை எடுக்க வேண்டியிருப்பதால், அதுவரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு எந்தவித அனுமதியும் இல்லை என்றும், விதிமீறி சேவையை இயக்குபவர்கள் மீது அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், பைக் டாக்சிகளுக்கு தற்போது அனுமதி இல்லையெனில், அதை பொதுமக்களுக்கு தெளிவாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், பைக் டாக்சிகளில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் பொறுப்பேற்பவர் யார் என்பது குறித்தும் அரசு விரைந்து தெளிவான கொள்கை வகுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

    BikeTaxi MadrasHighCourt Rapido tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு
    Next Article “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!
    Editor web2
    • Website

    Related Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    August 3, 2026

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    August 3, 2026

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.