Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!
    Featured

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Editor web2By Editor web2August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm vijay stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நீர்திறப்பு, மேகதாது அணை, விவசாயிகள் நலன் உள்ளிட்ட விவகாரங்களில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசை முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆடிப்பெருக்கு நாளிலும் காவிரி நீர் தமிழகத்தை அடையாததால் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 12-ஆம் தேதி கிடைக்க வேண்டிய காவிரி நீர், ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பின்னரும் வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறக்க மறுக்கும் நிலையில், அதைக் கண்டித்து முதலமைச்சர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர், அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைக்கக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.

    மேலும், தேர்தலுக்கு முன் முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாகவும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல ஆர்வம் காட்டும் அரசு, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த தயங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்துச் சென்று பூஜை செய்ததால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீராது என்றும், நாக்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல் “திரையில் தன்னூத்து விவசாயியாக நடித்தவர் நிஜத்தில் கள்ள மௌனம் காக்கிறார்” என்று முதல்வர் விஜயை ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இறுதியாக, தேர்தல் வாக்குறுதியின்படி முழு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கவும், குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தீவிர நடவடிக்கை எடுக்கவும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், இதற்காக திமுகவின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

    CauveryIssue cmvijay mkstalin TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி
    Next Article கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!
    Editor web2
    • Website

    Related Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    August 3, 2026

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    August 3, 2026

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.