Author: Editor web2
தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதன் நிறைவு நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் உரையாற்றினார். இதற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பயிற்சி முகாமில் பேசிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவடையாததற்கான முக்கிய காரணம் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகிகள் பல்வேறு அணிகளாகப் பிரிந்து செயல்படுவதும்தான் எனக் குறிப்பிட்டார். “கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைகளே காங்கிரஸ் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளன. தலைவர்களும், தொண்டர்களும் தனித்தனியாக செயல்படாமல் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். சொந்த நலன்களை விட கட்சியின் நலனே முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். மாநில அளவில் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான மறைந்த பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜின் திரைப்பங்களிப்பையும் நினைவுகளையும் போற்றும் வகையில், ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ என்ற பெயரில் பிரம்மாண்ட விழா வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழா தொடர்பாக அண்ணா சாலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், லிங்குசாமி, பி. வாசு, ஏ.எல். விஜய், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணி நேரம் தொடர்ந்து விழா நடைபெறும் என்றார். பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோரின் சொந்த ஊர்களான தேனி மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் மணிமண்டபம் அமைப்பதற்கான தொடக்க முயற்சியாக இந்த விழா அமையும் என்றும், இருவருக்கும் வெண்கலச்…
கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சேவா டிரஸ்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “கோவில் கும்பாபிஷேகம், பிரம்மோற்சவம் உள்ளிட்ட மத விழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விழாக்களுக்கு யானைகளை பயன்படுத்த அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. மேலும், யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து அவற்றின் பரிந்துரையின் அடிப்படையில் அனுமதி வழங்கலாம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விழாக்களில் பங்கேற்கும் யானைகளின் உடல்நிலை மற்றும் தகுதி குறித்து அரசு கால்நடை மருத்துவரின் சான்றிதழ் கட்டாயமாக பெற வேண்டும், யானைகளுக்கு குறைந்தது 8 மணி நேரம் ஓய்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளையும் அரசு…
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விராலிமலை மற்றும் கரூர் உள்ளிட்ட ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, முன்னாள் அமைச்சரும் விராலிமலை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் முன்னாள் எம்.எல்.ஏ. எம். விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க கடந்த ஜூலை 10-ஆம் தேதி…
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலைக்குரியது என்றும், தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்துவது அரசின் முதல் கடமை என்றும் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற வெற்றி தமிழர் பேரவையின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களை குறிப்பிட்டு உரையாற்றினார். அரசுப் பள்ளிகளுக்கு அதிக கவனம் தேவை “மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மேடைக்கு வந்து பரிசு பெற்றபோது, இவர்கள்தான் நம் உறவினர்கள், இவர்களின் பெற்றோர்கள்தான் நம் பங்காளிகள் என்று நினைக்கிறேன். பணக்காரர்களுக்கு மாஸ்கோ இருக்கிறது, டெல்லி இருக்கிறது, சென்னை இருக்கிறது. ஆனால் கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியாத ஏழை, எளிய மக்கள் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளையே நம்பியிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி…
கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், அளவுக்கு அதிகமாக நீரைத் தேக்கினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆபத்து உருவாகும் என்பதால், “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல” என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கருத்து பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகக் காவிரி நீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்திற்குத் தினமும் 3,500 கனஅடி நீர் வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனப் புதுடெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், தங்கள் மாநிலக் குடிநீர் தேவையைச் சுட்டிக்காட்டி கர்நாடகா நீர் திறக்கத் தயக்கம் காட்டியது. இதனிடையே, மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரிப் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூகத் தீர்வு காணத் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த சூழலில், எல்லைப் பகுதிகளில் கன்னட…
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, அந்த ஆவணத்தை திருப்பதிக்கு எடுத்துச் சென்று பூஜை செய்ததாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக, இது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், “ பட்ஜெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் சட்டமன்றத்தில் வைப்பதற்கு முன்பு எந்த பொதுவெளியிலும் வைக்கக் கூடாது. ஆனால், சட்டமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை எடுத்து, தமிழக மாநில எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, திருப்பதியில் வைத்து பூஜை செய்துள்ளார் தவெக அரசின் வேளாண்துறை அமைச்சர்! பூஜை செய்யும் பொருட்டு அமைச்சரிடம் இருந்து நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்கும் என்பது, சட்டப்படி குற்றம் இல்லையா? ரகசிய காப்பு பிரமாணத்திற்கும், சட்டமன்ற விதிகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு குற்றத்தைச் செய்துள்ள அமைச்சர் மீது அரசும் சபாநாயகரும் எடுக்கப் போகும்…
வரும் ஆகஸ்ட் 15 முதல் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள எஃப்.ஐ.ஹெச் (FIH) உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கு முன்பாக, இந்திய ஹாக்கி அணியின் பாரம்பரிய நீல நிறச் சீருடையைக் காவி (Orange/Saffron) நிறத்திற்கு மாற்ற ஹாக்கி இந்தியா (Hockey India) எடுத்த முடிவு பெரும் சர்ச்சையையும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக இந்திய ஹாக்கி அணியின் அடையாளம் மற்றும் பெருமையாகத் திகழ்வது ‘நீல நிறச் சீருடை’ (Bleed Blue) ஆகும். 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கோப்பை வெற்றிகள் என இந்திய ஹாக்கியின் பொற்காலத் தருணங்கள் அனைத்தும் இந்த நீல நிறச் சீருடையுடனேயே பின்னப்பட்டவை. இந்த நிலையில் திடீரென தேசிய அணியின் முதன்மைச் சீருடையை மாற்றுவது விளையாட்டின் அடையாளத்தையே சீர்குலைக்கும் செயல் எனப் பலரும் கொந்தளித்துள்ளனர். தற்போது சர்வதேச ஹாக்கி போட்டிகள் நடைபெறும் செயற்கை புல்வெளிகள் (Blue Turf) நீல நிறத்தில் இருப்பதால், போட்டிகளின் போது வீரர்கள்…
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களின் போது, அமைப்பாளர்களுக்கும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவலை காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பாளர் அபிஜித் திப்கே திட்டவட்டமாக மறுத்துள்ளார். மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 37 நாள் போராட்டம் மற்றும் சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, நிறைவு உரையில் சோனம் வாங்சுக்கின் பெயர் இடம்பெறாதது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அமைப்பிற்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதற்குப் பதிலளித்துப் பேசியுள்ள சிஜேபி அமைப்பாளர் அபிஜித் திப்கே, “சோனம் வாங்சுக் ஐயாவின் தியாகத்தையும் பங்களிப்பையும் யாராலும் மறக்க முடியாது. அவர் தனது உயிரைப் பணயம் வைத்து இந்த நாட்டின் சாட்சியத்தை விழித்தெழச் செய்தார். ஒரு தனிநபரை மட்டும் ‘நாயகனாக’ சித்தரிப்பதைத் தவிர்க்கவே எனது உரையில் பொதுவான…
தஞ்சாவூர் மாவட்டம் தளிகை கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம ஐயனார் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சுற்றுவட்டார கிராம மக்களின் முக்கிய குலதெய்வமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இங்கு நடைபெறும் கிடா வெட்டு திருவிழா மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த ஆண்டும் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ பிரம்ம ஐயனார் கோவில் முன்பு பிரம்மாண்டமான முறையில் கிடா வெட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் சுமார் 1008 கிடாக்களை பலியிட்டு வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பிரம்மாண்டமான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தடபுடலான விருந்திற்காக சுமார் 40 ஆயிரம் கிலோ ஆட்டுகறியும் 20 ஆயிரம் கிலோ அரிசியில் சாப்பாடும் தயார் செய்யப்பட்டன. இந்த திருவிழாவின் மிக முக்கியமான மற்றும் வினோதமான அம்சம் என்னவென்றால், இந்த கிடா வெட்டு விருந்தில்…