Author: Editor web2

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், விருத்தாசலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய அவர், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுக்க வேண்டும் என்றார். மேலும், நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களின்…

Read More

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினரும், மாணவர்களும் மேற்கொண்டுள்ள போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், மாணவர்களுக்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளான  செளந்தர்யா ரஜினிகாந்தும் மாணவர்களுக்கு ஆதரவாகத் குரல் கொடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு என் முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களே நமது நாட்டின் எதிர்காலம். அவர்களின் குரல்கள் அனுதாபத்துடனும், கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கேட்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஒவ்வொரு மாணவருக்கும் தன்னம்பிக்கை, நியாயம் மற்றும் நம்பிக்கையைத் தரும் வகையிலான கல்வி முறை அமைய வேண்டும். அத்தகைய சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றும்…

Read More

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ 24 மணி நேரக் கெடு விதித்துள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது. டெல்லி அரசியலமைப்பு மன்றத்தில் (Constitution Club) மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அரசுப் பிரதிநிதிகளுடன் சிஜேபி குழுவினர் இன்று பிற்பகல் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் நலன் சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜே.பி. நட்டா, சிஜேபி கட்சியினரின் கோரிக்கைகள் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில்,பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஜந்தர் மந்தரில் பேசிய  கரப்பான் பூச்சி ஜனதா கட்சி  நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் பேச்சாளர்…

Read More

மத்திய அரசுப் பணியில் (Central Deputation) இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரை நில நிர்வாகக் ஆணையராக நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை  வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பொதுத் துறை (சிறப்பு-A) சார்பில் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், “ஐஏஎஸ் கேடர் விதி 4(2)-ன் படி, நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் (Additional Chief Secretary / Commissioner, Land Administration) என்ற தற்காலிகப் பணியிடம் ஓராண்டு காலத்திற்கு உருவாக்கப்படுகிறது. இதில், ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட  ஆர். கஜலக்ஷ்மி ஐஏஎஸ்-க்குப் பதிலாக  ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தற்காலிகப் பணியிடம் ஐஏஎஸ் (ஊதிய) விதிகள் 2016-ன் படி, தலைமைச் செயலாளர் (Chief Secretary) அந்தஸ்து மற்றும் அதிகாரங்களுக்கு நிகரானது என்றும் அந்த அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ நிர்வாகிகளுடன் இன்று பிற்பகல் மத்திய அரசு நடத்திய 2-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. டெல்லி அரசியலமைப்பு மன்றத்தில் (Constitution Club) நடைபெற்ற இச்சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர்.  இந்த பேச்சுவார்த்தையின்போது, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது அவசியம்  அல்லது அவரை பதவி நீக்க வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக  தகவல்கள் தெரிவிக்கின்|றன. பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினரின் கோரிக்கைகள் அனைத்தையும் முழுமையாகக் கேட்டறிந்தோம். நாளை மீண்டும் 3-ஆம் கட்டப்…

Read More

கடந்த 2023-ஆம் ஆண்டு கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தித் தாக்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று கரூர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மகேஷ் முன்னிலையில் நேரில் ஆஜராகி உத்தரவாத ஆவணங்களைச் சமர்ப்பித்தார். கடந்த 2023 மே மாதம், கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது, அங்கு திரண்ட திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் சோதனைக்கு இடையூறு விளைவித்து, அதிகாரிகளைத் தாக்கியதாகவும், சோதனை ஆவணங்களைச் சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பல திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அசோக்குமார் பெயரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது. முன்ஜாமீன் இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க அசோக்குமார் நீதிமன்றத்தை நாடி வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி…

Read More

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி புராதன சின்ன ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோபுரங்களைச் சுற்றி பூங்கா அமைப்பது உள்ளிட்ட பணிகள், மாநில அளவிலான நிபுணர் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி கோவிலுக்குள் மண்டபம் கட்டப்பட்டுள்ளதாகவும், பரதநாட்டிய அரங்கம் கோசாலையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த பொது தீட்சிதர்கள் தரப்பு, புதிய கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருப்பதாக விளக்கம் அளித்தது. விசாரணையின் போது,…

Read More

தவெக ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்த முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குதிரை பேரம் தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பேசிகள் மற்றும் பிற ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், சீனிவாசன், செல்வன், ராஜசேகர், சேதுராஜ் மற்றும் கணேசன் ஆகிய எட்டு பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தற்போதைய விசாரணை நிலை மற்றும் குற்றச்சாட்டுகளின் தன்மையை கருத்தில் கொண்டு, எட்டு பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி…

Read More

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கையை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இந்த ஆண்டு ஏற்பட்ட வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி  உள்ளிட்ட மாணவர், இளைஞர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகே, கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர்…

Read More

டெல்லியில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள், தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர் நலன் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி  சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றதைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த மோதலில் பல காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், சி.ஜே.பி. நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், காவல்துறையினரை தாக்குதல், பாதுகாப்பு வளையத்தை மீறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக…

Read More