Author: Editor web2
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த இந்திய ஆயுதப் படைகளின் வீரர்களுக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தனது இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தமிழக ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஆளுநரின் செய்தியைப் பகிர்ந்துள்ளது. அதில், “கார்கில் போரில் நமது நாட்டின் வெற்றியை உறுதிசெய்த இந்திய ஆயுதப் படைகளின் மாவீரர்களின் நிகரற்ற தைரியம், தளராத உறுதி மற்றும் உச்சக்கட்ட தியாகத்திற்கு இந்த புனிதமான நாளில் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். நமது வீரர்களின் வீரம் வரும் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக அமையும். நாட்டின் பாதுகாப்பும் இறையாண்மையும் நமது தியாக மனப்பான்மை கொண்ட வீரர்களின் சேவையாலேயே பாதுகாக்கப்படுகிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. நமது ஆயுதப் படைகளுக்கு நமது நன்றியை மீண்டும்…
தென் மண்டல கவுன்சிலில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் தலைமைச் செயலாளர் சாய்குமார் இடம்பெற்றுள்ளனர். மத்திய அரசு அவ்வப்போது நடத்தும் தென் மண்டல கவுன்சில் (Southern Zonal Council) கூட்டங்களில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கவுன்சில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தென் மண்டல கவுன்சிலுக்கான தமிழக பிரதிநிதிகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு அவ்வப்போது கூட்டும். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின்…
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர நீச்சல் வீரர் சாட் லெ க்ளோஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆடவருக்கான 4×100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே போட்டியில், அவரது அணி 3:13.99 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் சாட் லெ க்ளோஸ் வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், காமன்வெல்த் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்ற வீரர்/வீராங்கனைகளின் பட்டியலில் அவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கீயோன் 14 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து சாட் லெ க்ளோஸ் 19 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சுடுதல் வீரர் பில் ஆடம்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மிக் கவுல்ட்…
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) சார்பில் இளையோருக்கான ‘ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப்’ போட்டி ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சப்-ஜூனியர் சிறுவர் பிரிவின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது மைதானத்தில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்தது. ஹாக்கி 5s விதிமுறைப்படி ஒரு அணிக்கு 5 வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்ற நிலையில், பாகிஸ்தான் அணி விதியை மீறி 6 வீரர்களுடன் விளையாடியது. இதனை உடனடியாகக் கண்டறிந்த நடுவர்கள் போட்டியை இடைநிறுத்தி பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தனர். விதிமீறலுக்காகப் பாகிஸ்தான் அணியின் 2 வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் பாகிஸ்தான் அணி வெறும்…
கோவை பெரியகடை வீதியில் உள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் பணத்தைத் திருடிய புகாரில், 4 கோயில் ஊழியர்கள் மற்றும் கவனக்குறைவாகச் செயல்பட்ட 4 அதிகாரிகள் உட்பட மொத்தம் 8 பேரைப் பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூலை 15, 2026 அன்று கோனியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரு உண்டியலை மட்டும் திட்டமிட்டுத் திருடியதாகக் கோயில் ஊழியர்களான பாலசுப்ரமணியன் (சீட்டு விற்பனையாளர்), சரவணன் (அலுவலக உதவியாளர்), பிரதிப்குமார் (திருவலகு) மற்றும் கிருஷ்ணராஜ் (பூசாரி) ஆகிய 4 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் திருட்டுச் சம்பவத்தைக் கண்டறியத் தவறியது மற்றும் கடமை தவறியதற்காக அறநிலையத் துறை அதிகாரிகள் ராம்குமார் (சரக ஆய்வாளர்), உதயகுமார் (சரக ஆய்வாளர்), குமார் (செயல் அலுவலர்) மற்றும் உஷா நந்தினி (உதவி ஆணையர்) ஆகிய 4 அதிகாரிகளும் உடனடியாகக் கூண்டோடு பணியிடை…
தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பார்கள் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு, தமிழக அரசு சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணை (G.O. Ms. No. 43) மூலம், ‘தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003’-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக, இதுவரை டாஸ்மாக் கடைகளுக்குள் அல்லது கடையை ஒட்டியே மட்டுமே பார்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக் கடைக்கு அருகிலோ அல்லது அந்தக் கடையிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள்ளோ பார்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பார்களின் குறைந்தபட்ச பரப்பளவு 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்படும் என…
சென்னை மெட்ரோ ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கிளாம்பாக்கம்–செங்கல்பட்டு மற்றும் அசிசி நகர்–விம்கோ நகர் ஆகிய இரண்டு புதிய நீட்டிப்பு வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. தற்போது, சென்னை மெட்ரோ முதல் கட்டம் மற்றும் அதன் நீட்டிப்பு திட்டத்தின் கீழ் இரண்டு வழித்தடங்களில் 54 கிலோமீட்டர் தொலைவுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. நீட்டிப்பு திட்டம் திருத்தங்களுடன் 13 நிலையங்கள் மற்றும் ரூ.9,445 கோடி மதிப்பில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அந்தப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் தொடங்கப்படவுள்ளன. இதற்கிடையில், முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக முன்மொழியப்பட்ட கிளாம்பாக்கம்–செங்கல்பட்டு வழித்தடத்தை மேலும் 27 கிலோமீட்டர் வரை நீட்டிப்பதற்கும், இரண்டாம் கட்டத்தின் 5-வது வழித்தடத்தில் மாதவரம் அசிசி நகர் முதல் விம்கோ நகர் வரை 11 கிலோமீட்டர்…
எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி வெறும் மூன்று நாட்களில் உலகளவில் 171 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியான இத்திரைப்படம், முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வார இறுதியில் வசூல் மேலும் அதிகரித்து, முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் மட்டும் ₹108.34 கோடி மொத்த வசூலையும் (India Gross), வெளிநாடுகளில் ₹63.50 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது. இதன் மூலம் உலகளவில் படத்தின் மொத்த வசூல் ₹171.84 கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் ₹50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் திரையரங்குகளில்…
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக வெளியான தகவலுக்கு, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை தொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகாவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லவிருப்பதாக வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு செல்வது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும், மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான இருதரப்பு பிரச்சினை அல்ல; கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச கோரிக்கை மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அந்த விவகாரத்தை இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினையாக தமிழ்நாடு ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் அணை…
விவசாய பம்ப் செட்டுகளுக்கு வழங்கப்படும் 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் 14 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மறுத்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ” ஜூலை 24-ஆம் தேதியிட்ட ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 18 மணி நேர இலவச மின்சாரம் இனிமேல் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையல்ல. தமிழக விவசாயிகளுக்கு 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லைநாள்தோறும் 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது” என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், மின் கட்டமைப்பில் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக மட்டுமே சில மணி நேரங்களுக்கு…