Author: Editor web2
சென்னை எழும்பூரில், நீட் தேர்வை எதிர்த்து நீலம் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர்கள் பா.ரஞ்சித், அமீர், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்துள்ள மாணவர் போராட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். “ஒரு நாட்டில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த நாட்டின் மற்ற அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்பதற்கே அது அடையாளம். மாணவர் போராட்டம் என்பது அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது” என்றார். நீட் தேர்வின் தாக்கத்தை தனது நண்பர்களின் குடும்பங்களிலேயே நேரடியாகக் கண்டுள்ளதாகக் கூறிய அவர், “என்னுடைய நண்பரின் மகன் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் முதல் ஆண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இந்த ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெறும் பொருளாதார வசதி அவர்களிடம் இல்லை. நல்ல திறமை கொண்ட…
நீட்-யுஜி தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய நிபந்தனைகளை விதித்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டிய அவர், “நீட் விவகாரத்தில் விவாதம் நடந்தால் அரசு எடுத்த நடவடிக்கைகளும், காங்கிரஸ் மாணவர்களின் பிரச்சினையை அரசியலாக்குகிறது என்ற உண்மையும் வெளிவந்துவிடும் என்பதால்தான் அவர்கள் விவாதத்தைத் தவிர்க்கின்றனர்” என்றார். மேலும், “காங்கிரஸ் கட்சிக்கு தீர்வு வேண்டாம்; அவையின் செயல்பாடுகளை முடக்குவதே நோக்கம். பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களைப் பேசவிடாமல் தடுக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள்…
தமிழக மாவட்ட நீதித்துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுருக்கெழுத்தர்கள், தட்டச்சர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம வாய்ப்பு உரிமையை பாதிக்கும் வகையில் பின்வாசல் நியமனங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். தற்காலிக நியமனங்களை நிரந்தரமாக்குவது, போட்டித் தேர்வுக்காக காத்திருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களின் உரிமைகளை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினர். மேலும், தற்காலிக நியமனம் என்பதைக் அறிந்தே பணியில் சேர்ந்தவர்கள் பின்னர் பணி நிரந்தரம் கோர முடியாது என்று கூறிய நீதிபதிகள், அவர்கள் விரும்பினால் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கான வழக்கமான ஆட்சேர்ப்பு தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தனர். அத்துடன், காலவரம்பின்றி தற்காலிக நியமனங்களை தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறை என்பதால், மாவட்ட…
நீட் தேர்வு முறைகேடு, தேர்வுத்தாள் கசிவு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி தலைமையில் டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில், டெல்லியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ், டெல்லி காவல்துறை ஆணையருக்கு மூன்று மாத காலத்திற்கு தடுப்புக் காவல் அதிகாரங்களை பயன்படுத்த அனுமதி வழங்கி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், கைது செய்யப்படும் நபரை காரணம் கூறாமல் 3 மாத காலத்துக்கு சிறையில் அடைக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. 1980-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3(2)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் 2026…
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழகத்தில் மேலும் இரண்டு டி.என்.ஏ. (மரபணு) பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கை விரைந்து விசாரிக்கவும், போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற பதிவுத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக ஆறு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும்,…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசும் சிபிஐயும் பதிலளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்த கதிரேசன் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறை நடைமுறைகளை மீறி, சீருடை அணியாத துப்பாக்கிச் சுடும் வீரர்களை பயன்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படுத்தியதாகக் கூறி, அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஒரே ஒரு காவல் ஆய்வாளர் பெயர் மட்டுமே குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல்…
டெல்லி ஜந்தர் மந்தரில் ‘நீட்’ தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடியைக் கண்டித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் களமிறங்கியுள்ளனர். உச்ச நீதிமன்ற வளாகத்தின் புல்வெளியில் திரண்ட மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், டாக்டர் எஸ். முரளிதரன் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் (SCBA) விகாஸ் சிங் ஆகியோர் தலைமையில் திரளான இளம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். தேசியக் கொடிகள் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகங்களை ஏந்தியபடி, அவர்கள் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை (Preamble) உரக்க வாசித்துத் தங்களின் மாபெரும் கண்டனப் போராட்டத்தைப் பதிவு செய்தனர். போராட்டம் குறித்து ஊடகங்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், “நாங்கள் இங்கு மாணவர்களுக்காகவும் நீதியின் பக்கத்திலும் நிற்க வந்துள்ளோம். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.…
தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?” என…
நீட் தேர்வு முறைகேடுகள், தொடர் வினாத்தாள் கசிவுகள் மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காவல் துறைத் தாக்குதலைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமரித்துப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “ஒரு குழந்தை அழுதபோதே நாம் கேட்டிருக்க வேண்டும். மாறாக, நமது ஏராளமான குழந்தைகள் இறக்கும் வரை நாம் காத்திருந்துவிட்டோம். கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சிகளும், ஆர்வத்திற்குப் பதிலாகப் பதற்றமும், தகுதிக்குப் பதிலாகக் குற்றச் செயல்களும் மேலோங்கியுள்ள ஒரு கல்வி முறை முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டது. பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்குப் பதிலளிப்பதற்கு மாறாக, தடுப்புகளையும் லத்திகளையும் பரிசளிக்கும் போது ஒரு நாடு தோற்றுவிட்டது என்றே அர்த்தம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இப்போராட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலாகத் தீவிர உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள கமல்ஹாசன், “வரவிருக்கும் தொலைதூரப் பயணத்திற்கு…
டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘நீட்’ தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும், அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன். நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரதீப் ரங்கநாதன், கிஷோர் மற்றும் பாடகர் அறிவு உள்ளிட்ட பல பிரபலங்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்குத் தங்கள் ஆதரவைப் பதிவு செய்திருந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜும் மாணவர்கள்…