Close Menu
    What's Hot

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்
    Featured

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    Editor web2By Editor web2June 24, 2026Updated:June 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாலக்கரை பகுதியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு,  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ரவிசங்கர்,  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் விமர்சனங்களை முன்வைத்துவிட்டு, முதலமைச்சரின் பதிலுரையை முழுமையாகக் கேட்காமல் வெளியேறியதாக குற்றம்சாட்டினார்.

    “முதல்வர் பேசும்போது முறையாக சபாநாயகரிடம் அனுமதி பெற்ற பிறகே உறுப்பினர்கள் சைகை செய்தனர். ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் இருந்த சிலர் ஒருமையில் மற்றும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதால் தான் சபாநாயகர் அவர்களைக் கண்டித்தார்” என மேலும் தெரிவித்தார்.

    vlcsnap 2026 06 24 17h35m42s655

    முதல்வரின் பேச்சு விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவரது பேச்சை பலரும் பாராட்டியுள்ளனர். எந்த அடிப்படையில் விமர்சனம் வருகிறது என்பது புரியவில்லை” எனத் தெரிவித்தார்.

    மேலும், “முதல்வர் நடிகராகவும், சபாநாயகர் இயக்குநராகவும் செயல்பட்டனர்” என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டபோது, “அதை பார்த்து பார்த்து படிச்சாரே… கீழே பார்த்து படிச்சாரே… அதை சொல்றீங்களா?” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

    முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தது குறித்து கேட்கப்பட்டபோது, “உங்களைப் போலத்தான் நானும் பார்க்கிறேன். அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் தான் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்று ரவிசங்கர் கூறினார்.

    RaviShankar TamilNaduAssembly TNpolitics UdhayanidhiStalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை
    Next Article அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி
    Editor web2
    • Website

    Related Posts

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    June 24, 2026

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    June 24, 2026

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் நடிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.