Author: Editor web2
தமிழக முதல்வர் மற்றும் நடிகருமான விஜய்யின் திரையுலகப் பயணத்தில் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, உலகம் முழுவதும் நாளை 23 ம் தேதி மிக பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் திருவிழா போன்ற பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விண்ணில் ஜொலித்த ‘மரீனா ஃப்ளையிங் எல்.இ.டி’ படத்தின் விளம்பர உத்தியாக, சென்னை மெரினா கடற்கரையில் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் ‘மரீனா ஃப்ளையிங் எல்.இ.டி’ (Marina Flying LED) காட்சி திரையிடப்பட்டது. அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் விண்ணில் மிதந்த பிரம்மாண்டமான எல்.இ.டி திரையில், விஜய்யின் மாஸ் தோற்றங்கள், படத்தின் தலைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்புகள் காட்சியளிக்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான நவீன விளம்பர உத்தியை நேரடி காட்சியாகக் காண மெரினாவில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அதிரடி…
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள், தேர்வுக் கேள்வித்தாள் கசிவு மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதத்தை முடிப்பதற்கான புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “நான் வாழ விரும்புகிறேன். ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை உண்ணாவிரதத்தை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய உண்ணாவிரதத்தை முடிப்பதை பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு சில முக்கிய கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது முக்கிய கோரிக்கைகளில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவது, நீட் உள்ளிட்ட…
டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய நாடாளுமன்றப் பேரணியின் போது, மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய கொடூரமான தடியடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்த போதிலும், டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தலையிட்டு காவல்துறைக்குக் கடுமையான கண்டிப்பைக் காட்டியுள்ளது. கடந்த ஜூலை 20-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ‘சலோ சன்சத்’ பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய கடுமையான தாக்குதல் தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்யக் கோரியும், காவல்துறை அத்துமீறல் குறித்து விசாரிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், “நீதிமன்றத்தின் நேரத்தையும் உங்களது நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” எனக் கூறி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இதில் தலையிடத் திட்டவட்டமாக மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் அதிகப்படியான பலம் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட இரண்டு பொதுநல மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.…
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுக்கு நடிகையும் தொழிலதிபருமான ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து காக்ரோச் ஜனதா கட்சி தலைமையில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகையும் தொழிலதிபருமான ப்ரீத்தி ஜிந்தா மாணவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்துவது மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், மாணவர்களின் அமைதியான போராட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் தேசவிரோத சக்திகளால் திசைதிருப்பப்படாமல் இருப்பதும் முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இணையதளங்களில் பரவி வரும் வெறுப்பும் பிளவுகளும் கவலையளிப்பதாக குறிப்பிட்ட அவர், “மாணவர்கள் உணரும் கோபத்தையும் விரக்தியையும் ஆயுதமாக பயன்படுத்துவதற்காக நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தீய சக்திகள் கூடுதல் நேரம் வேலை செய்யத்…
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை குறித்து முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் இருந்து ரங்கேகவுண்டன்புதூர் மற்றும் வீரப்பகவுண்டனூர் வரை இயக்கப்பட்டு வந்த இரண்டு அரசு பேருந்துகளின் சேவை, கேரள எல்லை வரை நீட்டிக்கப்பட்டது. இந்த புதிய வழித்தட பேருந்து சேவையை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மாநில அரசு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்தார். அப்போது டாஸ்மாக் கடைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், முதல் கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறினார். தற்போது இதுபோன்ற இடங்களில் இன்னும் செயல்பட்டு வரும் கடைகளை…
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் முன்வைத்துள்ள மூன்று முக்கிய கோரிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும் வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டின் கல்வி முறை கடந்த 10 ஆண்டுகளில் முற்றிலும் சீரழிந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் பல்வேறு தேர்வுகளில் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. தேர்வு முறைகேடுகள் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார். “அதிகாரச் செருக்கைக் கைவிட்டு, வீதியில் இறங்கிப்…
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி, 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் சிந்தாமணியும், தொகுதி வாக்காளர் பொன். பன்னீர்செல்வமும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். வாக்காளர் பொன். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு, அவர் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், அது சட்டப்படி விசாரணைக்கு ஏற்றதா என்ற கேள்வி எழுந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் மனுக்களை மனுதாரரே நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்ட விதி என்றும், வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு நடைமுறைக்கு முரணானது என்றும் குறிப்பிட்டு, அந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், தவெக வேட்பாளர்…
தவெக. அரசு கடந்த மே 13-ஆம் தேதி பெரும்பான்மை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியபோது, கட்சிக் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, கரூர் தொகுதி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை தொகுதி சி. விஜயபாஸ்கர் ஆகிய ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில்…
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில், காக்ரோச் ஜனதா கட்சியினர் (CJP) முன்னெடுத்த ‘சலோ சன்சத்’ போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் போலீஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, டெல்லி போலீஸ் முக்கிய நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இனிமேல் கட்டாயம் அதிகாரப்பூர்வ சீருடையில் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும்; ’சிவில்’ ( சாதாரண) உடையில் பணியில் ஈடுபடக் கூடாது என்று டெல்லி போலீஸ் தலைமையகம் அனைத்து பிரிவுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது, சீருடை அணியாத சிலர் போலீஸ் லத்திகளுடன் போராட்டக்காரர்களை தாக்கியதாக சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலானது. மேலும், சில சீருடை போலீசார் கூட தங்களது பெயர் அடையாள அட்டைகளை அகற்றியிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து போலீசாரின் நடவடிக்கை…
அரசியலில் கொள்கைகளை விடவும், மக்களின் கவனத்தை ஈர்க்கும் ‘காட்சி பதிவுகளே’ பெரும்பாலும் மக்களின் கவனத்தை தீர்மானிக்கின்றன. செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே அரங்கேறிய நாடகத்தனமான சம்பவங்கள், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ரீதியாகப் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நீட் தேர்வு முறைகேடு மற்றும் மாணவர்கள் மீதான காவலத்துறைத் தாக்குதலைக் கண்டித்து பிரதமர் இல்லத்திற்கு வெளியே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காவல்துறையினரால் அவர் வலுக்கட்டாயமாகத் தரையில் இழுத்துச் செல்லப்பட்டு, மூக்கில் ரத்தம் வழிய, வெள்ளை நிற டீ-சர்ட்டில் ரத்தக் கறைகளுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஒரு காலணியைக் கூட இழந்து, தூக்கிச் செல்லப்பட்ட ராகுல் காந்தியின் அந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன? இச்சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மூத்த…