Author: Editor web2

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,500 ஏக்கர் நிலம் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்குச் சொந்தமான தனியார் நிலமாகும். மீதமுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானது. விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது, குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் ஏகனாபுரம் உள்ளிட்ட பல கிராம மக்கள் நீண்ட காலமாக இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பரந்தூருக்குச் சென்ற தற்போதைய முதலமைச்சர் விஜய், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல; மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் கிசான்…

Read More

தமிழகத்தில் வருகிற 27-ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவி வருவதால், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 26-ம்…

Read More

தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தில் சுமார் 10 டன் கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தென்காசி கீழக்கடையத்தில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தில் சுமார் 10 டன் எடையுள்ள கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டைக் குப்பைத் தொட்டியாக நினைக்கும் அண்டை மாநிலத்தின் போக்கையும், அதைத் தடுக்கத் தவறிய தவெக விஜய் அரசின் மெத்தனத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இங்கு வீசப்பட்டுள்ள மூட்டைகளில் மலையாள எழுத்துகளும், கேரள வாகன எண்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக், மின்னணுக் கழிவுகள் (e-waste) மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளால் ஜம்பு நதியும், விளைநிலங்களும், நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எல்லைக் கண்காணிப்பிலும், கோயில் நிலங்களைப் பாதுகாப்பதிலும் தவெக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. எனவே, இந்த 10…

Read More

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உணவகத்தில் சாப்பிட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் மற்றும் மூன்று சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ”திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே, தாங்கள் சாப்பிட்ட உணவிற்கும் பணம் கொடுக்குமாறு கூறி, ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி வாலிபர் உள்ளிட்ட 3 சிறுவர்கள் மீது, தவெகவினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, பொதுமக்களை அடிமைகள் போல பாவிக்கும் தனது கட்சி தொண்டர்களை விஜய் கண்டிக்க மறுக்கிறாரா? அல்லது அவரது பேச்சை சொந்தக் கட்சிக்குள்ளேயே எவரும் கேட்பதில்லையா? பெண்களை பின் தொடருவது, பாலியல் ரீதியாக அத்துமீறுவது, மாமூல் அராஜகத்தில் ஈடுபடுவது, கட்சி அலுவலகத்திலேயே லஞ்சம் வாங்குவது, பொருத்தமற்ற உடல் பாவனைகளால் பொதுமக்களை பயமுறுத்துவது, அரசு அலுவலகங்களில் ரீல்ஸ் எடுத்து தொந்தரவு செய்வது என…

Read More

தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ராஜேஷ் லக்கானி, மத்திய அரசு பணியில் இருந்து மீண்டும் தமிழக பணிக்குத் திரும்புகிறார். இதையடுத்து, அடுத்த தமிழக தலைமைச் செயலாளர் பதவிக்கான போட்டியில் அவரது பெயர் முக்கியமாக பேசப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் எம். சாய்குமார் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும் சாய்குமார் தொடர்ந்து தலைமைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறவிருந்த சாய்குமாரின் பதவிக்காலத்தை மத்திய அரசு ஆறு மாதங்கள் நீட்டித்துள்ளது. இதன்படி, அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை பதவியில் நீடிக்க உள்ளார். இதற்கிடையில், அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 1992-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, தருமபுரி உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கினார். பின்னர்…

Read More

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின் கட்டண குளறுபடி தொடர்பாக தவறு செய்த அதிகாரிகள் மற்றும் மின் கணக்கீட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மின் கட்டணம் தொடர்பாக வெளியான தலைமைப் பொறியாளரின் சுற்றறிக்கை குறித்து விளக்கமளித்த அவர், நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சரியான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுவான சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டதாக கூறினார். ஆனால், அதை சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகப்படியான மின் கட்டணம் வந்ததாக புகார்கள் எழுந்துள்ளதால், அங்கு மீண்டும் மின் கணக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தற்போது மின் கணக்கீடு செய்ய வேண்டிய 5,500 பணியிடங்களில் வெறும் 800 பேர் மட்டுமே பணியாற்றுவதால், மனிதவள பற்றாக்குறையும் இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என்றார். மின்…

Read More

மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய திரைப்பட விருதுகளில், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும், தான் தயாரித்து, இயக்கி, நடித்த ‘ராயன்’ படத்திற்காகச் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் நடிகர் தனுஷ் வென்றுள்ளார். இதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சீமான் தனது வாழ்த்து அறிக்கையில், “தமிழ்த்திரையின் முன்னணி நடிகர், அன்புத்தம்பி தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும், ‘ராயன்’ படத்திற்காகச் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது. சிறந்த நடிகராக 3 முறையும், சிறந்த திரைப்படங்களுக்கான விருதைத் தயாரிப்பாளராக 2 முறையும், இயக்குநராக 1 முறையும் என ஆறாவது முறையாக இந்திய அரசின் விருதை வென்றிருப்பது அவருடைய கடின உழைப்பிற்கும், ஒப்படைப்பு மிக்க கலைப்பணிக்கும் கிடைத்துள்ள உயரிய அங்கீகாரமாகும்” என்று பாராட்டியுள்ளார். மேலும், “ஏற்ற கதாபாத்திரம் எதுவாயினும் அதன் அசலாகவே வாழ்ந்து,…

Read More

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், விளாத்திகுளம் எம்எல்ஏ கைது விவகாரம், திமுக குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து விளக்கம் அளித்தார். விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பேசிய அமைச்சர், பொதுக்கூட்ட மேடையில் முதலமைச்சரை அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதாக கூறினார். அதன்பேரில்தான் புகாரின் அடிப்படையில் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” என விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டபோது, “முதல்வரின் கையை உடைப்பேன் என்று வெளிப்படையாக பேசிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. பொதுவெளியில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுப்பது சட்டவிரோதமான செயல்” என்று பதிலளித்தார். மேலும், கடந்த திமுக ஆட்சியில் சமூக வலைதள பதிவுகளுக்கே குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், 70 வயது…

Read More

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினர் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி உள்ளனர். ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் தங்களது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மீது அரசின் அதிகார துஷ்பிரயோகம் நிகழ்ந்துள்ளது. அநீதிக்கு எதிராக எழும் குரல்களை அடக்குமுறையால் ஒருபோதும் மௌனமாக்க முடியாது. தலைநகர் டெல்லியில் உருவாகியுள்ள இளைஞர் எழுச்சியை அடக்குவதற்காக கண்ணீர்ப்புகை…

Read More

சென்னையில் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலையில் முதல்வர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ]தலைமைச் செயலகத்தில் வழக்கமான அலுவல் பணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் விஜய், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் ஆலையையும், அண்மையில் சைதாப்பேட்டை மாணவர் விடுதியையும் ஆய்வு செய்து, மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து திடீரென சென்னை சேத்துப்பட்டுக்கு சென்ற முதல்வர், அங்குள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். நாளொன்றுக்கு 100 டன் உணவு மற்றும் காய்கறி கழிவுகளை மறுசுழற்சி செய்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திறன் கொண்ட இந்த…

Read More