Author: Editor web2

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்புமனுவில் வருமான வரி பாக்கி இல்லை எனக் கூறியுள்ளார். வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை மறைத்துள்ளார். அதிகளவில் செலவு செய்து வெளிநாட்டினர் மூலம் பிரச்சாரம் செய்துள்ளார். கட்சி அடையாளங்களை அணிந்து சென்று முட்டி போட்டு தேவாலயத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார்…

Read More

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவலைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டனாச்சம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தின் அடியில் பழமையான தங்க நாணயங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் வாய்வழி தகவல்கள் வேகமாக பரவின. இந்த தகவலை நம்பிய பொதுமக்கள், விவசாய நிலங்கள் மற்றும் காலி இடங்களில் குழிகள் தோண்டி நீண்ட நேரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிலர் உலோக கண்டறியும் கருவிகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. தகவல் பரவியதையடுத்து அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், தங்க நாணயங்கள் இருப்பதாக எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்றும், வதந்திகளை நம்பி சட்டவிரோதமாக நிலங்களை தோண்டக்கூடாது என்றும் எச்சரித்தனர். அதிகாரப்பூர்வ…

Read More

தமிழகத்தில் தனியார் பேருந்துகள் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கடந்த எட்டு ஆண்டுகளாக நிலவும் உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை நீக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் வெளியூர்களில் பணிபுரியும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், தனியார் பேருந்துகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒரு குழுவை அமைத்து பரிந்துரைகள் வழங்க உத்தரவிட்டிருந்த போதிலும், அதன் அடிப்படையில் எந்த…

Read More

நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவை தவிர்க்கும் வண்ணம் ஹெலிப்டர் மூலம் வினாத்தாள் கொண்டு வரும் சோதனை நெல்லையில் நடைபெற்றது நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் (NEET) தேர்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள்களை கொண்டு வரும் நடைமுறைக்கான சோதனை ஓட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது. கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பான சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்வு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த மத்திய மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தேர்வு வினாத்தாள்களை விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் நடைமுறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை பகுதியில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை புறப்பட்டு, நெல்லை…

Read More

இந்தியப் பாதுகாப்புத் துறை வரலாற்றில் ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாட்களாக மாறியுள்ளன. இஸ்ரேலின் புகழ்பெற்ற ‘அயர்ன் டோம்’ (Iron Dome) வான் பாதுகாப்பு அமைப்பைப் போல, இந்தியா தனக்கான பிரத்யேகப் பாதுகாப்பு அரணை உருவாக்குவதில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியுள்ளது. உலக நாடுகளின் பாதுகாப்பில் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பாலிஸ்டிக் ஏவுகணைகள்தான். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணைகள் சில நிமிடங்களில் இலக்கை தாக்கும் திறன் கொண்டவை. அவற்றை நடுவானிலேயே தடுத்து அழிப்பதற்கான தொழில்நுட்பம் மிகவும் சில நாடுகளிடமே உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டுமே இதுவரை இந்தத் திறனை முழுமையாகப் பெற்றிருந்தன. தற்போது அந்த வரிசையில் இந்தியாவும் உறுதியாக இணைந்துள்ளது. இன்டர்செப்டர் ஏவுகணைகள் – வானின் காவல் அரண் ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து (ITR) மேம்பட்ட இரண்டு…

Read More

நீண்ட காலப் பதட்டத்திற்கும் போர் மேகங்களுக்கும் மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இறுதியாக எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தம் உலக அரங்கில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள இந்த அமைதி உடன்படிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த பதட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என உலக நாடுகள் நம்புகின்றன. எனினும், இந்த நிம்மதிப் பெருமூச்சை ஒட்டுமொத்தமாகக் கலைத்துப்போடும் விதமாக, இஸ்ரேல் எடுத்துள்ள பிடிவாதமான நிலைப்பாடு தற்போது சர்வதேச நாடுகளைக் கவலைகொள்ளச் செய்துள்ளது. வளைகுடா பதற்றமும் உலக நாடுகளின் தவிப்பும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னர் நிலவிய சூழல் ஒட்டுமொத்த உலகையும் ஒரு பொருளாதார மற்றும் பாதுகாப்புப் படுகுழியில் தள்ளியிருந்தது என்றே கூற வேண்டும். இஸ்ரேல் – ஈரான் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கிய நிலையில், நிலைமை மேலும் மோசமாகியது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே…

Read More

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு குற்றங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்புடையதாக கைது செய்யப்படுவது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற…

Read More

பெண்களின் பாதுகாப்பு என்பது எந்த அரசுக்கும் வெறும் தேர்தல் வாக்குறுதியாக இருக்க முடியாது. அது ஆட்சியின் செயல்திறனை அளவிடும் முக்கியமான அளவுகோலாகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்களில் ஒன்று “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை”. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கவும் இந்தப் படை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கையெழுத்திட்ட முதல் மூன்று கோப்புகளில் ஒன்றாக இந்தத் திட்டம் இடம்பெற்றது. இதன் மூலம் பெண்களின் பாதுகாப்புக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக ஆளுங்கட்சி விளக்கியது. திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் திட்ட அறிவிப்புக்கும் அதன் செயல்பாட்டுக்கும் இடையே ஏற்பட்ட தாமதம் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு வழிவகுத்தது. ஆரவார தொடக்கம் இருப்பினும் ஒரு வழியாக ஜூன் 9 அன்று இந்த அதிரடிப்படை முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. “இந்த நிகழ்வு என்…

Read More

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டடததுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார்…

Read More

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தவெகவில் இணைந்த பின்னர் ராஜினாமா செய்த மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமாவை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நான்கு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில்…

Read More