Close Menu
    What's Hot

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»4 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா: இடைத்தேர்தலுக்கு தடை கோரி  அதிமுக வழக்கு
    Featured

    4 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா: இடைத்தேர்தலுக்கு தடை கோரி  அதிமுக வழக்கு

    Editor web2By Editor web2June 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ADMK office
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தவெகவில் இணைந்த பின்னர் ராஜினாமா செய்த மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    அவர்களின் ராஜினாமாவை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், அந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நான்கு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வழக்குகள் முடிவடையும் வரை தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குடன் இதையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அனைத்து மனுக்களையும் சேர்த்து விசாரிக்க வழக்கை நாளை மறுநாள் தள்ளிவைத்தது.

    விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நான்கு எம்.எல்.ஏ.க்களும் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததாகவும், அவர்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து சபாநாயகர் சட்டப்படி முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார். மேலும், அதிமுகவைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக முன்பு அளிக்கப்பட்ட புகாரை கட்சித் தலைமையே பின்னர் மன்னித்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதனால், நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள இடைத்தேர்தல் தொடர்பான சர்ச்சை தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு!. ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
    Next Article நள்ளிரவில் பயங்கரம்!. முதிய தம்பதியை மிரட்டி 60 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை!. மர்ம நபர்களுக்கு வலை!
    Editor web2
    • Website

    Related Posts

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    July 14, 2026

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    July 14, 2026

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100கோடி வசூல் விவகாரம் : திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.