Author: Editor web2
அயோத்தி ராமர் கோவிலின் நன்கொடை திருட்டு விவகாரத்தை அரசியல் நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டதாக ஜூன் 25-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அறக்கட்டளையின் முன்னாள் ஓட்டுநர் ராமஷங்கர் மிஸ்ரா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்தார். சம்பவத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின்போது, மனுதாரர்கள் இந்த வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், ஸ்ரீ…
ஜப்பானின் E10 ஷின்கன்சென் அதிவேக ரயிலை 2034-க்கு முன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால், இந்தியா தனது புல்லட் ரயில் திட்டத்தில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. மும்பை–அகமதாபாத் 508 கி.மீ. அதிவேக ரயில் திட்டத்திற்காக ஜப்பானிலிருந்து ஷின்கன்சென் ரயில், சிக்னலிங் அமைப்பு மற்றும் ஆபரேஷன் கண்ட்ரோல் சென்டர் (OCC) ஆகிய மூன்று முக்கிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட இருந்தன. ஆனால் E10 ரயில் இன்னும் வடிவமைப்பு நிலையில் இருப்பதால், அதற்கான விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்களைக் கூட ஜப்பான் தரப்பால் வழங்க முடியவில்லை என்று ரயில்வே அமைச்சக உயரதிகாரி தெரிவித்துள்ளார். இதனால், திட்டத்தை மேலும் தாமதப்படுத்தாமல் முன்னெடுக்க இந்தியா தனது சொந்த புல்லட் ரயிலை உருவாக்க முடிவு செய்துள்ளது. மேலும், கொரியா, தைவான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள ETCS (European Train Control System) என்ற சர்வதேச சிக்னலிங் முறையை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜப்பானின் ஆளும் லிபரல்…
இந்தியாவில் டெங்கு தடுப்புக்கான முதல் தடுப்பூசியாக ஜப்பானின் டகேடா பயோஃபார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் Qdenga தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி DENV-1, DENV-2, DENV-3, DENV-4 என டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கும் எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமோ, தடுப்பூசி செலுத்துவதற்கு முன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையோ இல்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். தோலுக்கு அடியில் (Subcutaneous) செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, 0.5 மில்லி அளவில் இரண்டு டோஸ்களாக, மூன்று மாத இடைவெளியில் வழங்கப்படும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஆண்டுக்கு 5 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்ய ஹைதராபாத்தைச் சேர்ந்த Biological E நிறுவனத்துடன் டகேடா ஒப்பந்தம் செய்துள்ளதால், இந்திய சந்தையில்…
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் நிறைவடைந்த நிலையில், அடுத்த 2030 FIFA உலகக் கோப்பை போட்டி ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக மூன்று கண்டங்களில் போட்டிகள் நடைபெறவிருப்பது இந்த தொடரின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 23-வது உலகக் கோப்பை வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்ற நிலையில், அடுத்த 24-வது உலகக் கோப்பை 2030-ம் ஆண்டு ஜூன் 8 முதல் ஜூலை 21 வரை ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 1930-ம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையின் 100-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த முறை ஒரு சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உருகுவே, அர்ஜென்டினா,…
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 25 மற்றும் 26-ம் தேதிகளிலும் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று,…
கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறந்து விட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமை நீரை முழுமையாகப் பெற மாநில அரசு உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்றும், ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சிக்கு பதிலாக 2.91 டிஎம்சி மட்டுமே கர்நாடகா திறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதத்தில் திறக்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரில், இதுவரை வழங்கப்பட வேண்டிய அளவு முழுமையாக திறக்கப்படவில்லை என்றும், ஜூன் மாத நிலுவை நீரையும் கர்நாடக அரசு இன்னும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் கூறியதாக வெளியாகியுள்ள…
நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், கல்வி முறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். பேரணியை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றபோது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடைகளை மீறி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றனர். மேலும், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள…
எல்நினோ பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், விவசாயிகளை பாதுகாக்க தேவையான நிதியை மத்திய அரசிடம் கோர உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்தி ராஜ் தெரிவித்துள்ளார். எல்நினோ காலத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் கூடுதல் பயிர்க்கடன் வழங்க வேண்டிய சூழல் உருவாகும். அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி விரைவில் டெல்லி சென்று மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகளை சந்தித்து, விவசாயிகளுக்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தற்போது நெல் சாகுபடி பரப்பு தொடர்பான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தற்போது போதுமான அளவில் இருப்பதாகவும், எல்நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளித்து விவசாயிகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காந்தி ராஜ் கூறினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தப் பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுமாறு தலைமை காவலர் கெஞ்சிப் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணை அவரது கணவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், தொடர்ந்து முகேஷ் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தத் தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் முகேஷை விசாரணைக்காக அழைத்தனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன், இனி பிரச்சினை செய்யக்கூடாது…
தனது கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மத்தை ஊட்டி வளர்த்து வரும் திமுக, இதையே எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று நியாயப்படுத்துவதாக தவெக குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளது. அந்தப் பதிவில், “அரசியலை வியாபாரமாகவே செய்துவரும் Vending machine தி.மு.க. இப்போது தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருகிறது. கேட்டால், அதுதான் எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது. மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிக அரசியல் புரிந்து வருவதை நம் தமிழக மக்களும் தினம் தினம் பார்த்தே வருகின்றனர். ஆனால், வழக்கம்போல மக்களை மறந்து தான் என்ற திமிரில் தி.மு.க. வழக்கம்போல அராஜகம் செய்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றி தி.மு.க. செயல்பட்டதால்தான் now they are enjoying…