Close Menu
    What's Hot

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!
    தமிழ்நாடு

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Editor web2By Editor web2June 17, 2026Updated:June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 17 183027
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதி மற்றும் பட்டியலின மக்களின் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

    அதில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசியலமைப்புச் சட்டம் 16(4-A)-ஐ அமல்படுத்தும் வகையில் தனிச் சட்டம் கொண்டுவரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Court hammer 1

    பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும் வகையில் புதிய பஞ்சமி நிலஉடைமைச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மக்களுக்கான சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.5,000 கோடி செலவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரும் சிறப்புத் திட்டம், நிலமற்ற ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றுள்ளன.

    இந்த கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாக கேட்டறிந்த முதலமைச்சர், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், சமூக நீதித்துறையின் பணிகளை பாராட்டியதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

    HonourKilling SocialJustice VanniArasu Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ
    Next Article அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!
    Editor web2
    • Website

    Related Posts

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    June 17, 2026

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    June 17, 2026

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    ‘டெலிகிராம்’ தடை மோடி அரசின் புதிய தந்திரமா? ராகுல் காந்தி கடும் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.